ந. முருகேசபாண்டியன்

ந.முருகேசபாண்டியன் (பிறப்பு: 1957[1]) மதுரை நகரில் பிறந்த இவர், சமயநல்லூர் கிராமத்தில் வளர்ந்தார். இவர் எழுபதுகளின் இறுதியில் வெளியான தேடல் இதழில் கவிஞராகச் சிறுபத்திரிகை உலகிற்கு அறிமுகமானவர் ஆவார். இலக்கிய விமர்சனத் தளத்தில் இயங்கிவரும் இவர், உயிர்மை இதழில் எழுதிய என் இலக்கிய நண்பர்கள் பத்தி, பரவலாகக் கவனம் பெற்றது. இவருடைய முதல் நூலான பிரதிகளின் ஊடே பயணம் (2003) சுடர் ஆய்வுப் பரிசு பெற்றது. சொற்கள் ஒளிரும் உலகம் (2007) நூலானது 2007 ஆம் ஆண்டின் சிறந்த கட்டுரை நூலாக தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தினால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. "அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில்" என்ற நூலில் சங்க இலக்கிய பெண் கவிஞர்களிலிருந்து ஆண்டாள் வரை எல்லோருடையபாடல்களையும் தொகுத்து உரையெழுதியிருக்கிறார். ([2]) புத்தக வாசிப்பின் வழியாகத் தன்னிருப்பை அடையாளம் காண்கிற இவர் மூன்று தலைமுறை எழுத்தாளர்களுடன் நெருக்கமாகப் பழகி வருகிறார்.

ந. முருகேசபாண்டியன்
ந. முருகேசபாண்டியன்
இயற்பெயர்/
அறியும் பெயர்
ந. முருகேசபாண்டியன்
பிறந்ததிகதி டிசம்பர் 26, 1957


புதுக்கோட்டை மாவட்டம், மேலைச்சிவபுரி, கணேசர் கலை அறிவியல் கல்லூரியில் நூலகராகவும் நூலகவியல் தகவல் அறிவியல் துறைத் தலைவராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். நூலகம் தகவல் அறிவியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றுள்ள இவருடைய நெறியாள்கையின் கீழ் 24ஆய்வு மாணவர்கள் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர். தற்சமயம் மதுரையில் வசித்துவரும் இவர் சான்லாக்ஸ் பன்னாட்டுத் தமிழியல் ஆய்விதழ் என்ற காலாண்டிதழின் முதன்மை ஆசிரியராக உள்ளார். தமிழ்த் திறனாய்வை நவீனக் கோட்பாடுகளின் அடிப்படையில் அணுகுகின்ற இவர் இலக்கியக் கூட்டங்களில் திறம்பட உரையாற்றுவதில் வல்லவர்.



எழுதிய நூல்கள்

திறனாய்வு

  • பிரதிகளின் ஊடே பயணம்(55 புத்தகங்களின் மதிப்புரைகள்). சென்னை: மருதா பதிப்பகம்,2003.
  • தமிழ் மொழிபெயர்ப்பில் உலக இலக்கியம் (திறனாய்வு).சென்னை: தி பார்க்கர்,2004.
  • சொற்கள் ஒளிரும் உலகம்(விமர்சனக் கட்டுரைகள்). திருவண்ணாமலை: வம்சி புக்ஸ்.2006
  • திராவிட இயக்க வளர்ச்சியில் கலைஞரின் நாடகங்கள் ( திறனாய்வு). சென்னை; வ,உ.சி.நூலகம். 2007
  • இலக்கிய ஆளுமைகளின் படைப்புத்திறன்(விமர்சனக் கட்டுரைகள்), திருச்சி: உயிர் எழுத்து பதிப்பகம்,2009.
  • என் பார்வையில் படைப்பிலக்கியம்(58 புத்தகங்களின் மதிப்புரைகள்).சென்னை: அம்ருதா, 2009
  • புத்தகங்களின் உலகில்(38 புத்தகங்களின் மதிப்புரைகள்). சென்னை: பாவை பதிப்பகம்,2010.
  • மறுவாசிப்பில் மரபிலக்கியம்:சங்க இலக்கியம் மமுதல் பாரதிதாசன் வரை(விமர்சனக் கட்டுரைகள்).சென்னை: நற்றிணை பதிப்பகம்,2011.
  • நவீனப் புனைகதைப் போக்குகள்.( விமர்சனக் கட்டுரைகள்). சென்னை:என்.சி.பி.ஹெச், பதிப்பகம்,2015
  • எங்கே செல்கிறது தமிழ்க் கவிதை?. (விமர்சனக் கட்டுரைகள்) சென்னை: உயிர்மை பதிப்பகம்,2015
  • அண்மைக்காலக் கவிதைப்போக்குகள்:வரலாறும் விமர்சனமும். சென்னை:என்.சி.பி.ஹெச், பதிப்பகம்,2016
  • மறுவாசிப்பில் செவ்விலக்கியப் படைப்புகள். சென்னை:என்.சி.பி.ஹெச், பதிப்பகம்,2015.
  • விமர்சகர்கள் படைப்பாளர்கள்: படைப்பாளுமைகள் பற்றிய கட்டுரைகள் (2016). சென்னை: என்.சி.பி.ஹெச். பதிப்பகம்
  • புனைவு எழுத்துகளின் மறுபக்கம்:சமகாலத்திய நாவல்கள்,சிறுகதைகள் குறித்த விமர்சனம்(2017). சென்னை: உயிர்மை பதிப்பகம்.
  • பழந்தமிழ் இலக்கியத்தில் விளிம்பு நிலையினர் (2017). கோவை: விஜயா பதிப்பகம்.
  • எங்கே செல்கிறது தமிழ்க் கவிதை? (விரிவுபடுத்தப்பட்ட புதிய பதிப்பு). சென்னை: டிஸ்கவரி புக்பேலஸ்.2019

மானுடவியல்/நாட்டுப்புறவியல்

  • கிராமத்து தெருக்களின் வழியே:தமிழ்ப் பண்பாட்டு மரபினைப் பதிவு செய்யும் ஆவணம்.சென்னை: டிஸ்கவரி புக் பேலஸ் , 2017.
  • குடுப்புறவியல் குடுகுடுப்பைக்காரர் வாழ்வியல்: இனவரைவியல் ஆய்வு. சென்னை: உயிர்மை பதிப்பகம் ,2009.மறு பதிப்பு: என்.சி.பி.ஹெச். சென்னை,2017.

அரசியல்

  • கலைஞர் என்றொரு ஆளுமை(2018). சென்னை: டிஸ்கவரி புக் பேலஸ் பதிப்பகம்.

சிறுகதைத் தொகுதி

  • மழைக்கால ராத்திரியும் மூன்று கனவுகளும்.சென்னை: டிஸ்கவரி புக் பேலஸ் பதிப்பகம் 2019

பொது

என் இலக்கிய நண்பர்கள்( 15 இலக்கியவாதிகள் பற்றிய மனப்பதிவுகள்). சென்னை: உயிர்மை பதிப்பகம்,2006.

பொதுக் கட்டுரைகள்

  • தமிழர் வாழ்க்கையில் பூக்கள்( கட்டுரைகளின் தொகுப்பு). சென்னை:என்.சி.பி.ஹெச், 2014.
  • போதையின் நிழலில் தடுமாறும் தமிழகம்(அரசியல் கட்டுரைகள்).சென்னை:டிஸ்கவரி புக் பேலஸ்,2016
  • தமிழ்ப் பண்பாட்டு அடையாளங்கள்(பண்பாட்டுக் கட்டுரைகள்).சென்னை:டிஸ்கவரி புக் பேலஸ்,2016
  • தமிழர் வாழ்க்கையும் திரைப்படங்களும். சென்னை:டிஸ்கவரி புக் பேலஸ்,2016.
  • காற்றில் மிதக்கும் சொல்லாத சேதிகள்.(சமூக விமர்சனக் கட்டுரைகள்) சென்னை: உயிர்மை பதிப்பகம்,2018.

தொகுப்பாசிரியராகத் தொகுத்த நூல்கள்

  • சங்கப் பெண் கவிஞர்களின் கவிதைகள். சென்னை: மருதா பதிப்பகம்,2005. மறு பதிப்பு: மதுரை: செல்லப்பா பதிப்பகம்
  • அற்றைத்திங்கள் அவ்வெண்ணிலவில்: சங்கப் பெண் கவிஞர்கள் முதல் ஆண்டாள் வரை. சென்னை: என்சிபிஹெச் பதிப்பகம்,2014.
  • பிரபஞ்சன் கட்டுரைகள்.சென்னை:டிஸ்கவரி புக் பேலஸ்,2016
  • நாஞ்சில்நாடன் சிறுகதைகள். திருச்சி: உயிர் எழுத்து பதிப்பகம்,2011.
  • தேர்ந்தெடுக்கப்பட்ட இறையன்பு சிறுகதைகள்(2017). சென்னை: என்.சி.பி.ஹெச். பதிப்பகம்.
  • நாஞ்சில்நாடன் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்(2018). சென்னை: டிஸ்கவரி புக் பேலஸ் பதிப்பகம்.
  • கந்தர்வன் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்(2018). சென்னை: டிஸ்கவரி புக் பேலஸ் பதிப்பகம்.
  • என்.ஸ்ரீராம் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்(2018). சென்னை: டிஸ்கவரி புக் பேலஸ் பதிப்பகம்.
  • வேல ராமமூர்த்தி தேர்ந்தெடுத்த சிறுகதைகள்.(2018). சென்னை: டிஸ்கவரி புக் பேலஸ் பதிப்பகம்.
  • சாரு நிவேதிதா தேர்ந்தெடுத்த சிறுகதைகள். .(2018). சென்னை: டிஸ்கவரி புக் பேலஸ் பதிப்பகம்.
  • ஜீ.முருகன் தேர்ந்தெடுத்த சிறுகதைகள். (2018). சென்னை: டிஸ்கவரி புக் பேலஸ் பதிப்பகம்.
  • ஆண்டாள் பாடல்கள்.(2019) சென்னை: டிஸ்கவரி புக் பேலஸ் பதிப்பகம்.
  • காரைக்காலம்மையார் பாடல்கள்(2019). டிஸ்கவரி புக் பேலஸ் பதிப்பகம்.

பதிப்பாசிரியராகப் பதிப்பித்த மொழிபெயர்ப்பு நூல்கள்

  • பாசிசம்(2006). கெவின் பாஸ்மோர். அ.மங்கை.. (மொ-பெ). புத்தாநத்தம்: அடையாளம் பதிப்பகம்.
  • ஃப்ராய்ட்(2005). அந்தனி ஸ்டோர். சி.மணி (மொ-பெ). புத்தாநத்தம்: அடையாளம் பதிப்பகம்.
  • உலகமயமாக்கல்(2006). மான்ஃபிரட் பி. ஸ்டெகர். க. பூரணச்சந்திரன். (மொ-பெ). புத்தாநத்தம்: அடையாளம் பதிப்பகம்.
  • பௌத்தம்(2005). தாமியென் கோவ்ன். சி.மணி (மொ-பெ). புத்தாநத்தம்: அடையாளம் பதிப்பகம்.
  • வரலாறு(2005). ஜான் எச்.அர்னால்டு. பிரேம் (மொ-பெ). புத்தாநத்தம்: அடையாளம் பதிப்பகம்.
  • பாசிசம்(2005). மைக்கேல் கேரிதர்ஸ். சி.மணி. (மொ-பெ). புத்தாநத்தம்: அடையாளம் பதிப்பகம்.
  • கலைஞர் பொற்கிழி (உரைநடைப் பிரிவு) தமிழ்நாடு புத்தகப் பதிப்பாளர் சங்கம்(பப்பாசி) (2020 )

விருதுகள், சிறப்புகள்

  • சிறந்த ஆய்வுக்கான நூலகச் சுடர் ஆய்வுப் பரிசு (பிரதிகளின் ஊடே பயணம் )
  • சிறந்த வமிரிசக நூல் விருது, தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் (சொற்கள் ஒளிரும் உலகம்) (2007).
  • சிறந்த கட்டுரை, சின்னக் குத்தூசி அறக்கட்டளை ( தொலைக்காட்சி அரசியல் கட்டுரை), ரூ.10,000/- பரிசு பெற்றது (2012).
  • சிறந்த விமர்சகர் விருது - சென்னை டிஸ்கவரி பேலஸ் (2014).
  • சிறந்த கட்டுரை நூள், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் (மறுவாசிப்பில் செவ்வியல் இலக்கியப் படைப்புகள்) (2017).
  • திறனாய்வுச் செம்மல் பட்டம், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம், மதுரை அமைப்பு (2019)
  • வாழ்நாள் சாதனையாளர் விருது (தமிழ்நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடை அமைப்பு (2019)
  • கலைஞர் பொற்கிழி (உரைநடைப் பிரிவு) தமிழ்நாடு புத்தகப் பதிப்பாளர் சங்கம்(பப்பாசி) (2020 )

மேற்கோள்கள்

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2011-05-16 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110516062039/http://www.nakkheeran.in/users/frmArticles.aspx?A=9297. 
  2. கிராமத்துத்தெருக்களின் வழியே நூலில் ஆசிரியர் குறிப்பு 2

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=ந._முருகேசபாண்டியன்&oldid=4817" இருந்து மீள்விக்கப்பட்டது