ந. பாலகிருஷ்ணன்


ந. பாலகிருஷ்ணன் (பிறப்பு மே 21, 1960) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவார். ந. பச்சைபாலன் எனும் புனைப்பெயரில் நன்கறியப்பட்ட இவர் இடைநிலைப் பள்ளி ஆசிரியருமாவார். மேலும் இவர் காஜாங் இலக்கியக் களத்தின் நிறுவுநரும், தலைவருமாவார்.

ந. பாலகிருஷ்ணன்
இயற்பெயர்/
அறியும் பெயர்
ந. பாலகிருஷ்ணன்
பிறந்ததிகதி மே 21, 1960
அறியப்படுவது எழுத்தாளர்

எழுத்துத் துறை ஈடுபாடு

1976 முதல் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரிதும் சிறுகதைகள், கவிதைகளுடன் புதுக்கவிதைகள் பற்றி நிறைய விமர்சனக் கட்டுரைகள், இடைநிலைப் பள்ளி மாணவர்களுக்குத் தமிழ் மொழி இலக்கிய வழிகாட்டிக் கட்டுரைகள் ஆகியவற்றை எழுதி வருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.

நூல்கள்

  • "மௌனம் கலைகிறேன்" (சிறுகதைகள், 1986);
  • "கூவத் துடிக்கும் குயில்கள்" (தேசியப் பல்கலைக்கழக மாணவர்களின் புதுக்கவிதைத் தொகுப்பு, 1990);
  • "நெம்புகோல்" (புதுக்கவிதைகள், 1997)
  • தமிழ் இலக்கியம் - தேர்வுக் களஞ்சியம் (2007)
  • என் கனவுகளும் கொஞ்சம் கவிதைகளும் (புதுக்கவிதைகள், 2009)
  • இலக்கியப் பயணத்தில் ஹைக்கூ பாடகன் (பயணக்கட்டுரை, 2009)
  • திசைகள் தொலைத்த வெளி (கவிதைகள், 2013)
  • தமிழ் இலக்கியம் - தேர்வுக்களம் (மாணவர்க்கு வழிகாட்டி நூல், 2013)
  • தமிழ் இலக்கியம் - மாதிரித் தேர்வுத்தாள்கள் ( 2013)
  • இன்னும் மிச்சமிருக்கிறது (கவிதைகள், 2014)
  • தமிழ் இலக்கியம் - தேர்வுக் களஞ்சியம் (மாணவர்க்கு வழிகாட்டி நூல், 2016)
  • தமிழ் இலக்கியம் - மாதிரித் தேர்வுத் தாள்கள் (2016)
  • எஸ்.பி.எம். தமிழ் மொழி - தேர்வுக் களஞ்சியம் (2018)

பரிசில்களும், விருதுகளும்

  • தமிழ் நேசன் - இலக்கியக் கருத்தரங்கம் (1983, 1985)
  • ஸ்ரீ கோத்தா - ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி (1983, 1984)
  • மலாயாப் பல்கலைக் கழகப் பேரவைச் சிறுகதைப் போட்டி
  • மயில் சிறுகதைப் போட்டி
  • மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்க பொன்விழா கட்டுரைப் போட்டியில் முதல் பரிசு (2013)
  • தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் கரிகாற்சோழன் விருது (2013)

உசாத்துணை

"https://tamilar.wiki/index.php?title=ந._பாலகிருஷ்ணன்&oldid=6295" இருந்து மீள்விக்கப்பட்டது