ந. சந்திரன்

ந. சந்திரன் (பிறப்பு ஏப்ரல் 1 1945) மலேசியாவில் மூத்த எழுத்தாளர்களுள் ஒருவராவார். இவர் ஒரு ஓய்வு பெற்ற மின்சார நிறுவன ஊழியராவார்.

ந. சந்திரன்
இயற்பெயர்/
அறியும் பெயர்
ந. சந்திரன்
பிறந்ததிகதி ஏப்ரல் 1 1945
அறியப்படுவது எழுத்தாளர்

எழுத்துத் துறை ஈடுபாடு

1962 முதல் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் நாவல்கள், சிறுகதைகளை எழுதியுள்ளார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.

நூல்கள்

சிறுகதைத் தொகுப்பு

  • "ந.ச.வின் சிறுகதைகள்"

நாவல்கள்

  • "அல்லி மலர்"
  • "இதய ரோஜா"
  • "சந்திப்பும் பிரிவும்"
  • "கரையில் ஒதுங்கிய சிப்பிகள்"
  • "மண்ணில் நல்ல வண்ணம்"
  • "இதயம் பேசினால்"
  • "இதயம் பேசும்".

பரிசில்களும், விருதுகளும்

மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கமும், தேசியத் தோட்டத் தொழிற் சங்கமும் இணைந்து நடத்திய நாவல் போட்டியில் மூன்றாம் பரிசு பெற்றுள்ளார். மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் டான் ஸ்ரீ ஆதி நாகப்பன் விருது பெற்றுள்ளார்.

உசாத்துணை

"https://tamilar.wiki/index.php?title=ந._சந்திரன்&oldid=6293" இருந்து மீள்விக்கப்பட்டது