நூறாவது நாள்

நூறாவது நாள் (Nooravathu Naal) 1984 இல் வெளிவந்த இந்தியத் தமிழ் திரைப்படமாகும். மர்மம் தொடர்பான பரபரப்பூட்டும் இத்திரைப்படத்தை மணிவண்ணன் எழுதி இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தில் விசயகாந்து, மோகன் நளினி ஆகியோர் நடித்திருந்தனர். தேங்காய் சீனிவாசன், சனகராஜ் சத்யராஜ் ஆகியோர் துணை வேடங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படம் 1977 ஆம் ஆண்டு வெளிவந்த இத்தாலியத் திரைப்படமான "செட் நோட் இன் நீரோவின்" அதிகாரப்பூர்வமற்ற தழுவலாகும்.[1] இத்திரைப்படம் மலையாளத்தில் ஆயிரம் கண்ணுகள் (1986) என்ற பெயரிலும், இந்தியில் 100 டேச் (1991) என்ற பெயரிலும் மறு ஆக்கம் செய்யப்பட்டது. இப்படம், குறைந்த செலவில், பன்னிரண்டு நாட்களில் எடுக்கப்பட்டது.

நூறாவது நாள்
திரைப்படச் சுவரொட்டி
இயக்கம்மணிவண்ணன்
தயாரிப்புஎஸ். என். எஸ். திருமாள்
திருப்பதி சாமி பிக்சர்ஸ்
இசைஇளையராஜா
நடிப்புமோகன்
விஜயகாந்த்
நளினி
சத்யராஜ்
வெளியீடுபெப்ரவரி 23, 1984
ஓட்டம்135 நிமி.
மொழிதமிழ்

கதைச்சுருக்கம்

கல்லூரி மாணவியான தேவி, ஒரு இரவு தனது சகோதரி கொலை செய்யப்படுவதைப் பற்றி ஒரு விசித்திரமான முன்னறிவிப்பைப் பெறுகிறார். இவரது சகோதரி விரைவில் காணாமலும் போகிறார். சில ஆண்டுகளுக்குப் பிறகு, தேவி ஒரு பணக்காரத் தொழிலதிபர் இராம்குமாரைச் சந்தித்து திருமணம் செய்து கொள்கிறார். விரைவில், தேவி ஒரு அடையாளம் தெரியாத பெண் கொலை செய்யப்படுவதைப் பற்றிய மற்றொரு பார்வையைப் பெறுகிறார். மேலும் பாதிக்கப்பட்டவரைக் காப்பாற்ற தனது உறவினர் இராஜுவின் உதவியை நாடுகிறார். இராஜூ அவளுடைய கதையை நம்ப தயங்குகிறார். ஆனால் எப்படியும் அவளுக்கு உதவுகிறார். இராம்குமாருடன் வசிக்கும் பங்களாவில் ஒரு சிதைந்த உடலையும் தேவி காண்கிறார். இது அவரது முந்தைய பார்வையை அடிப்படையாகக் கொண்ட தனது சகோதரியின் உடல் என்று அவர் நம்புகிறார். தேவியும், இராஜூவின் விசாரணைகளும், இவர்களை தேவியின் சகோதரி பணிபுரியும் அருங்காட்சியகத்திற்கும், இவர்களைக் கொல்ல முயற்சிக்கும் ஒரு விசித்திரமான மனிதரிடமும் அழைத்துச் செல்கின்றன. தேவியின் விசித்திரமான முன்னறிவிப்புகள் உண்மையா? அவளும் இராஜூவும் மர்மமான கொலையாளியைச் சிக்க வைக்க முடியுமா? என்பது மீதமுள்ள கதையாகும்.

நடிகர்கள்

பாடல்கள்

இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.[2][3]

வ. ௭ண் பாடல் பாடியவர்(கள்) வரிகள் ராகம்
1 "விழியிலே மணி விழியில் " எஸ். பி. பாலசுப்பிரமணியம் , எஸ். ஜானகி புலமைப்பித்தன்
2 "உலகம் முழுதும் பழைய ராத்திரி " கே. ஜே. யேசுதாஸ், வாணி ஜெயராம் வைரமுத்து
3 "உருகுதே இதயமே" வாணி ஜெயராம் முத்துலிங்கம்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

http://www.imdb.com/title/tt081219/[தொடர்பிழந்த இணைப்பு]

"https://tamilar.wiki/index.php?title=நூறாவது_நாள்&oldid=34950" இருந்து மீள்விக்கப்பட்டது