நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றியம்

நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றியம் , இந்தியாவின் தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பத்து ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றியம் நாற்பத்தி நான்கு ஊராட்சி மன்றங்களை கொண்டுள்ளது. நீடாமங்கலம் வட்டத்தில் உள்ள இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் நீடாமங்கலத்தில் இயங்குகிறது.

மக்கள் வகைப்பாடு

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,15,373 ஆகும். அதில் பட்டியல் இன மக்களின் தொகை 31,386 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 151 ஆக உள்ளது. [2]

ஊராட்சி மன்றங்கள்

நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 44 கிராம ஊராட்சி மன்றங்களின் விவரம்;[3]

  1. அதங்குடி
  2. ஆதனூர்
  3. அரிச்சபுரம்
  4. ஆய்குடி
  5. செட்டிசத்திரம் அய்யம்பேட்டை
  6. சித்தமல்லி மேல்பாதி
  7. எடகீழையூர்
  8. எடமேலையூர் கண்டியன் தெரு
  9. எடமேலையூர் நடுத்தெரு
  10. எடமேலையூர் மேற்கு
  11. அனுமந்தபுரம்
  12. காளாச்சேரி
  13. காளாஞ்சிமேடு
  14. கானூர் அன்னவாசல்
  15. காரக்கோட்டை
  16. கட்டக்குடி
  17. கருவாக்குறிச்சி
  18. கீழாளவந்தசேரி
  19. கோவில் வெண்ணி
  20. மேலாளவந்தசேரி
  21. முக்குளம் சாத்தனூர்
  22. முன்னாவல் கோட்டை
  23. மூவர்கோட்டை
  24. நகர்
  25. நல்லிகோட்டை
  26. ஒளிமதி
  27. பரப்பனாமேடு
  28. பெரம்பூர்
  29. பேரையூர்
  30. பொதக்குடி
  31. பூவனூர்
  32. புதுதேவங்குடி
  33. புள்ளவராயன் குடிக்காடு
  34. இராயபுரம்
  35. ரிஷியூர்
  36. செருமங்கலம்
  37. சித்தாம்பூர் ஊராட்சி (சித்தாம்பூர்)
  38. சோனாபேட்டை
  39. தளிக்கோட்டை
  40. வடகாரவயல்
  41. வடுவூர் அக்ரஹாரம்
  42. வடுவூர் தென்பாதி
  43. வடுவூர் வடபாதி
  44. வெள்ளக்குடி

வெளி இணைப்புகள்

இதனையும் காண்க

மேற்கோள்கள்