நிர்மலா பெருமாள்

நிர்மலா பெருமாள் மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவார். ஒரு பள்ளி ஆசிரியை. மூன்று பெண் மக்களுக்கு தாயான இவர், தமிழ் இளைஞர் மணிமன்ற உறுப்பினராக பல சமூக பணிகளில் ஈடுபட்டு வருகின்றார்.

நிர்மலா பெருமாள்
நிர்மலா பெருமாள்
இயற்பெயர்/
அறியும் பெயர்
நிர்மலா பெருமாள்
அறியப்படுவது எழுத்தாளர்

எழுத்துத் துறை ஈடுபாடு

1970 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் சிறுகதைகள், கவிதைகள், வானொலி நாடகங்கள் போன்றவற்றை எழுதி வருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.

இவரது நூல்கள்

  • நெருப்பு நிலவு
  • மலரட்டும் மனித நேயங்கள்
  • வரலாற்றுக்குள் ஒரு வரி
  • குயில் கூவி துயில் எழுப்ப
  • தண்ணீரை ஈர்க்காத தாமரை

இவரது வரவேற்புப் பெற்ற சிறுகதைகள்

  • அவள் அழமாட்டாள்
  • ஆலய புறாக்கள்
  • ஆண் மனதின் ஆழம்
  • கசந்து போன மருந்து

வரவேற்புப் பெற்ற வானொலி நாடகங்கள்

  • மனதில் உறுதி வேண்டும்
  • வாழ்ந்த வரைக்கும்
  • அர்த்தங்கள் அற்பங்களானால்

வரவேற்புப் பெற்ற கவிதைகள்

  • நியாயத் தராசு நேராக இருக்கட்டும்
  • விறகு வெட்டி
  • மானம் விமானம் ஏறுதய்யோ
  • சித்திரையில் ஒரு முத்திரை
  • மந்திரிக்கோர் மந்திரி
  • ராகங்கள் தொடரட்டும்
  • பெண்ணல்ல கண்ணா உன்னைப்பெற்றவள்
  • கோரிக்கையற்ற கூட்டமா?
  • மலரட்டும் மனித நேயங்கள்
  • சிதறிய சலங்கைகள்

பரிசுகள்

இவரது படைப்புக்கள் தேசிய நிலையில் பல பரிசுகளை வென்றுள்ளன.

உசாத்துணை

"https://tamilar.wiki/index.php?title=நிர்மலா_பெருமாள்&oldid=6307" இருந்து மீள்விக்கப்பட்டது