நிர்மலா இராஜசேகர்
நிர்மலா ராஜசேகர் (Nirmala Rajasekar) இவர் ஓர் கர்நாடக இசை பாணியில் இந்திய சரஸ்வதி வீணைக் கலைஞராவார். நிர்மலா ராஜசேகர் தனது 6 வயதில் வீணைப் பயிற்சியை சென்னையில் தேவகோட்டை சிறீ நாராயண ஐயங்கார் மற்றும் திருமதி. கமலா அசுவத்தமா ஆகியோரிடம் பயிற்சி மேற்கொண்டார். பின்னர், பெங்களூருக்குச் சென்ற பிறகு, பசவங்குடியில் உள்ள கானமந்திர் பள்ளியில் திருமதி. ஜி. சென்னாமா மற்றும் திருமதி. இ. ப. அலமேலு ஆகியோரிடம் வீணைப் பயிறியை மேற்கொண்டார். மேற்கத்திய பாரம்பரிய இசை மற்றும் ஜாஸ் உள்ளிட்ட பிற இசை மரபுகளுடன் கூட்டு திட்டங்களை உருவாக்க தென்னிந்திய பாரம்பரியத்தை (கர்நாடக இசை) ஆராய்வதில் உள்ள திறமைகளுக்கு இவர் பெயர் பெற்றவராவார். உலகின் பல கலை வடிவங்களுக்கு கர்நாடக இசையை அறிமுகப்படுத்தியுள்ளதால், பத்திரிகைகள் இவரைஒரு "கர்நாடக இசைத் தூதர்" என்று அடிக்கடி வர்ணிக்கின்றன. [1] சென்னையில் மதிப்புமிக்க விருதுகளைப் பெற்றவர் மற்றும் கர்நாடக இசை அரங்கில் இவரது திறமைக்காக அமெரிக்கா முழுவதும் அங்கீகாரம் பெற்றவர். [2]
இயற்பெயர்/ அறியும் பெயர் |
நிர்மலா இராஜசேகர் |
---|---|
பிறந்ததிகதி | 11 December |
பிறந்தஇடம் | சென்னை |
பணி | இசைக்கலைஞர், இசையமைப்பாளர், பாடகர், வைனிகா |
வகை | கர்நாடகம், உலக இசை |
இசைக்கருவி | சரசுவதி வீணை |
இணையதளம் | www.nirmalarajasekar.com |
ஐக்கிய நாடுகள் சபை மற்றும் அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தின் கார்னகி ஹால் போன்ற பல உலக புகழ்பெற்ற இடங்களில் நிர்மலா இசை சிகழ்ச்சிகளை நிகழ்த்தியுள்ளார். [3]
பயிற்சி
இவர் 13 வயதில் குரலிசைப் பாடகராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர் சென்னையில், மரியாதைக்குரிய வீணை நிபுணர் மறைந்த திருமதி. கல்பகம் சுவாமிநாதன் என்பவரால் வழிநடத்தப்பட்டார். நிர்மலா அவரிடம் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக பயிற்சி பெற்றார். சிறீ பி. சீதாராம சர்மா மற்றும் பேராசிரியர் டி. ஆர். சுப்பிரமணியம் ஆகியோர் இவரது வாய்ப்பாட்டு குருக்களாவர். இவரது இசை 'விழுமியமானது', 'படைப்பு மற்றும் புதுமையானது, ஆனால் பாரம்பரிய மதிப்புகளில் சிக்கியுள்ளது', 'பிரமாதமானது மற்றும் ஆத்மார்த்தமானது' என்று விவரிக்கப்பட்டுள்ளது.
நாதரசம்
இவர் பள்ளி இசைக்கான நாதரசம் என்ற (ஒலி மற்றும் உணர்ச்சி), என்ற நிறுவனத்தின் கலை இயக்குனர் ஆவார். அமெரிக்காவின் பல இடங்களிலும் வானொலி மற்றும் தொலைக்காட்சிகளிலும் இவரது குழுவின் நிகழ்ச்சிகள் காணப்பட்டு, கேட்கப்பட்டுள்ளன.
நிர்மலா உலகெங்கிலும் கர்நாடக இசைக்கு குரல் கொடுத்தும் மற்றும் அவரது வீணையில் பயணித்தும் வருகிறார். இவர் ஒரு தீவிர ஒருங்கிணைப்பாளராக உள்ளார். மேற்கத்திய பாரம்பரிய இசை, ஜாஸ், சீன இசை, கவிதை மற்றும் நடனம் உள்ளிட்ட பல பிரிவுகளில் எழுதி நிகழ்ச்சிகளை நிகழ்த்தி வருகிறார்.
இசைத் தொகுப்புகள்
மெலோடிக் எக்ஸ்பிரஷன்ஸ் [4], சாங் ஆஃப் தி வீணா, [5] இன் டூ தி ராகா [6] மற்றும் சுதா சாகரா [7] உள்ளிட்ட பல்வேறு இசைத் தொகுப்புகள் மற்றும் பதிவுகளை நிர்மலா வெளியிட்டுள்ளார். இவர் தற்போது மைத்ரி [8] என்ற கூட்டு இசைத் தொகுப்புகளில் பணிபுரிகிறார்.
விருதுகள் மற்றும் கௌரவங்கள்
வீணா மற்றும் கர்நாடக இசையில் இசை உலகிற்கு இவர் செய்த பல பங்களிப்புகளுக்காகவும், உணர்ச்சிகரமான பரவலாக்கத்திற்காகவும் புஷ் கலை கூட்டுறவு (2006), [9] மெக்நைட் கூட்டுறவு, (இந்த கூட்டுறவுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்திய இசைக்கலைஞர் என்ற பெருமையை பெற்றவர்)[10] மற்றும் சர்வ தேச அரிமா சங்கத்தின் தொழில்சார் விருது மற்றும் சிறந்த மூத்த வீணைக் கலைஞர் (2009) [11] உள்ளிட்ட பல விருதுகள் மற்றும் கௌரவங்கள் நிர்மலாவுக்கு வழங்கப்பட்டது.
1989 ஆம் ஆண்டில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தவும் சர்வதேச விழாக்களில் பங்கேற்கவும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான அமைப்புகளால் நிர்மலா தேர்ந்தெடுக்கப்பட்டார். , சுவிட்சர்லாந்தின் பெர்ன் என்ற இடத்தில் 1991 இல் இவர் தனது முதல் நிகழ்ச்சியை நிகழ்த்தினார். 1990 ஆம் ஆண்டில், இந்தியாவின் முதன்மையான தர நிர்ணயக் குழுவான அகில இந்திய வானொலியால் ‘முதல் தரக் கலைஞர்’ என்ற தரவரிசை நிர்மலாவுக்கு வழங்கப்பட்டது. 1995இல், மினசோட்டா மாநில கலை வாரியத்திலிருந்து கலைஞர்கள் முன்முயற்சி, கலாச்சார ஒத்துழைப்பு மானியங்கள் போன்ற மானியங்களைப் பெற்றார். 2009 சனவரியில் டாக்டர் பாலமுரளிகிருஷ்ணா மற்றும் டாக்டர் சரஸ்வதி ஆகியோரிடமிருந்து நாத கலா விபான்சி விருது இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ் சொசைட்டியால் வழங்கப்பட்டது. நாரத கானசபா 2009 இன் சிறந்த வீணா கலைஞர் விருதினை வழங்கியது. ஏப்ரல் 2010 இல் சிகாகோ இல்லினாய்ஸில் நடந்த வீனாவின் இரண்டாவது தேசிய மாநாட்டில் ஒரு சிறப்பு கலைஞராக நிர்மலா நிகழ்ச்சியை நிகழ்த்தினார். அங்கு இசை உலகிற்கு அவர் செய்த பல பங்களிப்புகளுக்காக கௌரவிக்கப்பட்டார். [12]
குறிப்புகள்
- ↑ https://sites.google.com/site/nirmalarajasekar01/
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2020-02-05 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200205072536/http://naadharasa.blogspot.com/.
- ↑ https://sites.google.com/site/nirmalarajasekar01/artistic-profile
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2020-02-05 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200205072547/https://mio.to/album/Nirmala%2BRajasekar/Melodic%2BExpressions.
- ↑ https://www.innova.mu/albums/nirmala-rajasekar/song-veena
- ↑ https://www.innova.mu/albums/nirmala-rajasekar/raga
- ↑ https://charsur.com/album.php?aId=359
- ↑ Combs, Marianne. "Art Hounds: Tap dance, plein air painters and cross-cultural improv". June 2017. https://www.mprnews.org/story/2017/06/22/art-hounds
- ↑ https://www.bushfoundation.org/fellows/nirmala-rajasekar
- ↑ https://www.mcknight.org/grant-programs/arts/past-mcknight-artist-fellows
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2022-03-27 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220327153630/http://diftv.corridor-design.com/season-8/nirmala-rajasekar/.
- ↑ https://sites.google.com/site/nirmalarajasekar01/awards
வெளி இணைப்புகள்
- Official website
- interview with howwastheshow.com பரணிடப்பட்டது 2010-03-26 at the வந்தவழி இயந்திரம்
- official blog for Nirmala's music school பரணிடப்பட்டது 2020-02-05 at the வந்தவழி இயந்திரம்
- Nirmala's new Cd Into the Raga பரணிடப்பட்டது 2011-10-12 at the வந்தவழி இயந்திரம்
- [1]
- [2]