நிராமய தேவர் நூல்
நிராமய தேவர் நூல் என்பது நிராமய தேவர் என்பவரால் இயற்றப்பட்டது. நூலின் பெயர் தெரியாமையால் இந்த நூல் ஆசிரியர் பெயரால் குறிப்பிடப்பட்டுள்ளது. இது உரை காட்டும் நூல்களில் ஒன்று. இது ஒரு வேதாந்த நூல். [1]
இந்த நூல் வெள்ளியம்பலத் தம்பிரான் எழுதிய ஞானாவரண விளக்கவுரையில் மேற்கோளாகத் தரப்பட்டுள்ளது. இந்த நூலில் 50 வேதாந்திகளின் பெயர்கள் 50 பாடல்களில் சுட்டப்பட்டுள்ளன. பாடல்கள் பல்வகை விருத்தங்களாலும், சந்த விருத்தங்களாலும் ஆனவை. இந்த நூல் இன்று கிடைப்பதாகத் தெரியவில்லை.
பாடல் - எடுத்துக்காட்டு [2]
1
- உரூ உணர்வு இறந்திட்டு ஊமன் கண்டது ஓர் கனவே ஒப்பத்
- தெரிதரும் உணர்விற்கு ஏற்பச் செய்யும் ஆறு ஒன்று இன்றி
- உரை உணர்வு இழந்த நட்டத்து உற்றிடும் மனத்தான் அந்தத்
- திரிதரு பழுது இல் பேரானந்தமே சேர்ந்தது அன்றே.
2
- ஆதலால் ஞானமான அனுபவம் தேயத் தான
- நீதிலாப் பாழும் ஞாதிரு ஞேயமாம் சிவமும் சென்றல்
- தோதொணா மூன்றினோடும்உரை உணர்வு இழந்த நட்டத்து
- ஆதி ஆகும் அனுபூதியது முத்தி ஆகும்
3
- சீவன்-முத்தி, பர-முத்தி, சிவமாம்-முத்தி சொரூபத்தில்
- தோவு-முத்தி மேலான சொரூப நான்கோடு உறும் முத்தி
- நீதி முத்திரையின் முத்தி நீடு ஆனந்த முத்தியுடன்
- ஓது முத்தி ஒருபதுமே வேதாந்தத்தால் உறு முத்தி.
அடிக்குறிப்பு
- ↑ மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1976, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, மூன்றாம் பாகம். சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. பக். 287.
- ↑ பொருள் நோக்கில் சொற்பிரிப்பு செய்யப்பட்டது