நிதின் சத்யா
நிதின் சத்யா (பிறப்பு: ஜனவரி 9, 1980) தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார்.
நிதின் சத்யா | |
---|---|
பிறப்பு | ஜனவரி 9, 1980 சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
செயற்பாட்டுக் காலம் | 2004–அறிமுகம் |
ஆரம்ப வாழ்க்கை
நிதின் சத்யா லண்டனில் வணிக நிர்வாக முதுகலை பட்டம் பெற்றார். 2003 ஆம் ஆண்டு திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். 2004 ஆம் ஆண்டு கமல்ஹாசன், பிரபு மற்றும் சினேகா நடித்த வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் என்ற திரைப்படத்தில் சிறிய பாத்திரத்தில் நடித்தார். 2005 ஆம் ஆண்டு அஜித் நடித்த ஜி என்ற திரைப்படத்தில் நடித்தார். வெங்கட் பிரபு இயக்கத்தில் 2007 ஆம் ஆண்டு வெளிவந்த சென்னை 600028 என்ற திரைப்படத்தில் அவர் ஒரு முக்கிய பாத்திரம் நடித்தார். அதே ஆண்டில் சத்தம் போடாதே என்ற திரைப்படத்தில் நடித்தார். 2008 ஆம் ஆண்டு தோழா என்ற திரைப்படத்தில் முன்னணி பாத்திரத்தில் நடித்தார். அதை ஆண்டில் எஸ் ஏ சந்திரசேகர் இயக்கத்தில் பந்தயம் என்ற திரைப்படத்தில் நடித்தார். அதை தொடர்து ராமன் தேடிய சீதை என்ற திரைப்படத்தில் முக்கிய பாத்திரம் நடித்தார்.
திரைப்படங்கள்
ஆண்டு | திரைப்படம் | கதாப்பாத்திரம் | குறிப்புகள் |
2002 | பெண்ட் இட் லைக் பெக்காம் | Uncreditted role | |
2003 | காலாட்படை | ஸ்ரீதர் | |
2004 | வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் | நீலகண்டன் | |
ட்ரீம்ஸ் | ஷக்தி நண்பர் | ||
2005 | ஜி | அருண் | |
மஜா | சிதம்பரம் மகன் | ||
2007 | சென்னை 600028 | பழனி | |
சத்தம் போடாதே | ரத்தினவேலு | ||
2008 | தோழா | ராஜா | |
சரோஜா | லட்சுமி கோபால் | கேமியோ தோற்றம் | |
பந்தயம் | சக்திவேல் | ||
ராமன் தேடிய சீதை | குனசெக்கார் | ||
2009 | முத்திரை | சத்தியமூர்த்தி | |
பாலைவன சோலை | பிரபு | ||
2012 | மயங்கினேன் தயங்கினேன் | முத்துகுமரன் | |
2013 | பிரியாணி | ||
2014 | என்ன சத்தம் இந்த நேரம் | கதிர் | |
ஷிவானி | delayed | ||
அரண்மனை | படபிடிப்பில் | ||
மத கஜ ராஜா | delayed | ||
திருடன் போலீஸ் |
குறும்படம்
- வெள்ளை பூக்கள்
- அகல்யா 2012
- கடல் ராசா