நா. கண்ணன்


முனைவர் நா. கண்ணன் (நாராயணன் கண்ணன்) தமிழ் மரபு அறக்கட்டளை அமைப்பின் தலைவர்கள்; நிறுவனர்களில் ஒருவர் ஆவார். தமிழ் இலக்கிய, சரித்திர, கலை வடிவங்களை எண்ம (digital) வடிவில் மின்னுலகில் நிரந்தரப் படுத்தும் முயற்சியின் முன்னோடிகளில் ஒருவர்.

நா. கண்ணன்
நா. கண்ணன்
இயற்பெயர்/
அறியும் பெயர்
நா. கண்ணன்
பிறப்புபெயர் நாராயணன் கண்ணன்

நா.கண்ணன் தொழில்முறையில் ஒரு அறிவியல் விஞ்ஞானி. மதுரைப் பல்கலைக் கழகத்திலும், ஜப்பானிலுள்ள எகிமே பல்கலைக் கழகத்திலும் இருமுறை முனைவர் பட்டம் பெற்றவர். சூழல் வேதிமவியல், சூழல் நச்சுவியல் போன்ற துறைகளில் தமிழகத்திலிருந்து வெளிநாட்டில் வசிக்கும் முக்கிய இந்திய விஞ்ஞானிகளில் இவரும் ஒருவர். H index எனும் அறிவியல் தர மானி இவரை உலகின் முதல் பத்து சிறந்த பேராசிரியர்களில் ஒருவர் என்றும், இவரது அறிவியல் வெளியீட்டுத்தரம் நோபல் பரிசு பெற்றோரின் தரத்திற்கு ஒப்பு என்று கூகுள் சொல்கிறது. இவர் 10 வருடங்கள் ஜெர்மனியின் கீல் பல்கலைக்கழகத்தில் (கடலாய்வு மையம் - IFM GEOMAR) பேராசிரியராக (C3) இருந்துவிட்டு, பின் கொரியக் கடலாய்வு மையத்தில் (KIOST) ஆசிய-பசிபிக் நாடுகளுக்கான உயர் பயிற்சி மையத்தின் இயக்குநராக செயல்பட்டு, மலேசிய புத்ரா பல்கலைக் கழகத்திலும், டெய்லர்ஸ் பல்கலைக் கழகத்திலும் பேராசிரியராக இருந்து ஓய்வு பெற்று, மலேசியாவில் விவேகப் பசுமை நடுவம் எனும் ஆலோசனை நிறுவனத்தின் இயக்குநராக இருக்கிறார்..

தமிழ் மரபு அறக்கட்டளை

இவ்வமைப்பின் மூலமாக காலத்தால் அழிவுறும் ஓலைச் சுவடிகளைப் பாதுகாக்கும் முயற்சியில் முதலில் இறங்கியவர். இது குறித்த விழிப்புணர்வை தொடர்ந்து தமிழ் மக்களிடையே எடுத்துச் செல்பவர். இதற்காக இருமுறை இந்தியக் குடியரசுத்தலைவர் டாக்டர். அப்துல் கலாம் அவர்களைச் சந்தித்து இந்திய மைய அரசின் கவனத்தை ஈர்த்திருக்கிறார். இந்திய மா-கணினி மையம் (பெங்களூர்) எடுத்தாளும் இந்திய இலக்க நூலகம் மற்றும் மில்லியன் புத்தகத் திட்டத்தில் தொடர்ந்து இவ்வமைப்பின் மூலமாகப் பங்களித்து வருகிறார்.

தமிழ் வரலாறு, கலை, இலக்கிய ஆவணப்பதிவுகள் இந்திய மண் தாண்டி காலனியாதிக்க அரசுகளிடம் உள்ளது அறிந்து பிரித்தானிய நூலகத்திலுள்ள புத்தகங்களை இலக்கப்பதிவாக்கும் முயற்சியையும் அறிமுகப்படுத்தியவர். தமிழ் மரபு அறக்கட்டளையின் மூலமாக தமிழின் முதல் முஸ்லிம் பெண் நாவலாசிரியை சித்தி ஜுனைதா பேகத்தின் எழுத்தைத் தமிழக இலக்கிய உலகில் பிரபலப்படுத்தினார். அது போல் சிட்டி சுந்தரராஜன் அவர்களின் மூலமாக தமிழின் முதல் புதினம் (நாவல்) இலக்கப்பதிவாகிறது. தமிழில் உருவாகிய முதல் நுதலியப்பொறி (optical character recognition software) வாசித்த 1941ம் ஆண்டுப் புத்தகமும் பரணிடப்பட்டது 2011-03-06 at the வந்தவழி இயந்திரம் பரணிடப்பட்டது. அதே போல் தமிழ்ப் பாரம்பரியம் சார்ந்த பல குறுந்தகடுகளை த.ம.அ வெளியிட்டுள்ளது.

ஏனைய பணிகள்

கணித்தமிழ் இயக்கத்தின் மூத்த அமைப்பாளர்களுள் ஒருவர். தமிழ் வரிவடிவ அமைப்பு முயற்சிகளில் மெக்கிண்டாஷ் இயங்கு தளத்தில் முயன்று பார்த்தவர். இதற்காக கலிபோர்னியப் பல்கலைக்கழகப் (பெர்கிலி) பேராசிரியர் ஜியார்ஜ் ஹார்ட் அவர்கள் நடாத்திய பட்டறையில் கலந்து கொண்டவர். இது உத்தமம் எனும் அமைப்பு தோன்றி முறையாக எழுத்துச் சீர்மையில் இறங்கும் முன்னமே நடந்தது. உத்தமம் அமைப்பின் தொன்மை உறுப்பினர். பல வருடங்கள் ஐரோப்பிய கிளையின் தலைவராக செயல்பட்டு இருக்கிறார்.

தமிழின் முதல் மடலாடற் குழுவான தமிழ்.வலை பரணிடப்பட்டது 2007-10-29 at the வந்தவழி இயந்திரம் குழுமத்தில் தீவிரப் பங்கு கொண்டவர். அது பொழுது இவர் எழுதி பரபரப்பாக வாசிக்கப்பட்ட "பாசுர மடல்கள்" குறுந்தகடு வெளியீடாக தமிழ் இணைய மாநாட்டில் (கோலாலம்பூர்) வெளிவந்த போது இம்முயற்சிகளின் முன்னோடி எனும் தகுதியும் இவருக்குக் கிடைத்தது. இம்மடலாடற்குழு உருவாக்கிய மதுரைத்திட்டத்தில் ஐரோப்பிய ஒருங்கமைப்பாளராக இயங்கிவருகிறார்.

தமிழை மின்னுலகில் நிரந்தரப்படுத்தும் முயற்சி நிமித்தமாக காலச்சுவடு இதழ் நடாத்திய "தமிழினி 2000" எனும் கருத்தரங்கில் இணையமும் இலக்கியமும் எனும் அமர்வை உருவாக்கி, மின்னுலகம் என்பது தமிழின் ஆறாம்திணை எனும் கோட்பாட்டை பரணிடப்பட்டது 2007-08-28 at the வந்தவழி இயந்திரம் முன்வைத்தார்.

கொரோனா காலத்தில் இந்தியாவில் வாழும் போது இந்தியாவில் சூழலியல் கேடுகளுக்கு அடிப்படைக் காரணங்கள் தமிழ் மாண்புகளை நாம் இழந்ததே எனக்கருதி பண்பாட்டுச் சூழலியல் எனும் புதிய கருத்தியலை பரப்பி வருகிறார். சமகால வாழ்வு சுயதேவைப் பூர்த்தி என்பதிலும், எப்பாடு பட்டாவது உலக வளங்களை இறுதிவரை நுகர்தல் என்பதிலேயே இருக்கிறது. ஆயின் ஐந்திணை வாழ்வியல் என்பது சூழல் சார்ந்தே அமைகிறது. அப்போதைய விழுமியங்கள், வாழ்வியல் சமகால சூழலியல் பிரச்சனைகளுக்கு தீர்வாக அமையும் என நம்புகிறார். நம் வேர்களைப் பற்றிய புரிதலை அதிகரிக்க வேண்டுமென அறிவுறுத்தி வருகிறார்.

கொரியாவில் வாழ்ந்த காலங்களில் (2003-2011) தம் அறிவியல் பணி போக தமிழ் கொரிய தொடர்பு பற்றிய ஆய்வை மேற்கொண்டு பல உண்மைகளைக் கண்டறிந்தார். (உம்):

  • தமிழ் நெடுங்கணக்கை முன் மாதிரியாகக் கொண்டு ஹங்குல் (கொரிய) எழுத்து அமைகிறது. அதாவது உயிரெழுத்தும் மெய்யெழுத்தும் புணர்ந்து உயிர்மெய்யெழுத்து உருவாகும்.
  • பண்டைய கடலோடி தமிழ் வர்த்தகர்கள் ஓர் வணிகக் கூட்டமைப்பை “காயல்” எனும் பேரில் தென் கொரியாவில் அமைத்தனர். அதைக் கொரியர்கள் காயா அல்லது காரக் என்கின்றனர்.
  • பாண்டியரின் மீன் கொடியுடன் வந்திறங்கிய செம்பவளம் எனும் தமிழ்ப் பெண் கொரிய அரசனான கிம் சுரோவை மணந்து காயா கூட்டரசை உருவாக்குகிறார். இவரது வாரிசுகளே இன்றைய கிம், ஹோ, கிம்ஹே, இஞ்சியோன் லீ குழுவினர் செம்பவளம் எனும் பெயர் சீன/கொரிய பெயரின் தமிழாக்கமாகும். இப்பெயரிட்டவர் நா.கண்ணன்
  • இப்பெண்ணிற்கான நினைவாலயம் தவறுதலாக அயோத்தியா நகரில் அமைக்கப்பட்டுவிட்டது. அவளோர் தமிழச்சி எனும் உண்மையை நா.கண்ணன் தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்தமிழ் மடலாடற் குழுவில் 2006 லிருந்து தொடர்ந்து பேசிவருகிறார். அவளுக்கோர் நினைவாலயம் கீழடியில் வைக்கப்பட வேண்டும் என்பதோர் கோரிக்கை. அதற்கான ஆதாரங்களை தொடர்ந்து இந்திய, அயலகக் கருத்தரங்களில் வெளியிடுவதன் மூலமும், யூத்தூபி விழியங்கள் மூலமும் அளித்து வருகிறார். இதுவரை 12க்கும் மேற்பட்ட கருத்தரங்களிலும் (செம்மொழி மாநாடு உட்பட), 20க்கும் மேற்பட்ட விழியங்கள் மூலமும், இணைய உரையாடல்கள் மூலமும் இதை வலியுறுத்தி வருகிறார்.

இலக்கியப் பங்களிப்புக்கள்

மிழ் இலக்கிய உலகில் புதுக்கவிதையால் உந்தப்பட்டு உள்ளே நுழைந்த நா.கண்ணன் 70களிலிருந்து கவிதை, கட்டுரை, சிறுகதை, குறுநாவல் என பங்களித்து வருகிறார். இவரது படைப்புகள் கணையாழி, சுபமங்களா, இந்தியா டுடே, குங்குமம் மற்றும் புகலிடப் பத்திரிக்கைகளில் வெளிவந்து இருக்கின்றன.

தொடர்ந்து இவரது இலக்கியப் பங்களிப்பு மின்னுலகில் நடந்து வருகிறது. மின்னுலகின் பல்லூடகத்தன்மையைப் பயன்படுத்தி இவர் தனது படைப்புகளை ஒலிப்பதிவாக்கி வருகிறார் பரணிடப்பட்டது 2007-12-13 at the வந்தவழி இயந்திரம் , மாலன் அவர்கள் தொடங்கி நடத்திய திசைகள் மின்னிதழில் சில காலம் ஆசிரியர் குழுவிலும், இ-சங்கமம் இதழின் இணை ஆசிரியராகவும், சிஃபி டாட் காம் இதழில் பத்தியாளராகவும் இருந்துள்ளார்.

இவரது நூல்கள்

1. உதிர் இலை காலம்  - தாமரைச் செல்விபதிப்பகம், 1998

2. நிழல்வெளி மாந்தர்  - மதி நிலையம், 2004

3. விலைபோகும் நினைவுகள் - மதி நிலையம், 2004

4. தூரத்து மணியோசை - சந்தியா பதிப்பகம், வெளியீடு 2015

5. கொரியாவின் தமிழ் ராணி - ஆழி வெளியீடு 2018

6. கடல்வெளி - பென்சில் பதிப்பகம் 2018

7. தென் தமிழின் பத்துக்கட்டளைகள் - பென்சில் பதிப்பகம் 2018

8. பக்தியின் பன்முகம் - புஸ்தகா வெளியீடு 2020

9. Ten Commandments of Vishnu Chittan - அமேசான் வெளியீடு 2020

10. திக்கெட்டும் தமிழ் - பழனியப்பா பிரதர்ஸ் 2022

11. உலகு படைத்தல் - பழனியப்பா பிரதர்ஸ் 2022

12.  வேர் கொண்டு விண் எழுதல்  - பழனியப்பா பிரதர்ஸ் 2022

13. எண்பின் எழுத்து - பழனியப்பா பிரதர்ஸ் 2022

14. மலேசியச் சிந்தனைகள் - பழனியப்பா பிரதர்ஸ் 2022

15. Historical, Archeological, Linguistic, Cultural and Biological links between Korea and India: Kaya and Pandiya-2016. Tamil Heritage Foundation

16. Am I the memory?: Poems of celebration & inquiry - Pustaka Digital Media

17. ஆலவட்டம் - புஸ்தகா வெளியீடு 2022

18. Am I The Memory? Poems Of Celebration And Inquiry - புஸ்தகா வெளியீடு 2022

19. Attention: Pandemic Generation - புஸ்தகா வெளியீடு 2022

20. The Cloud Holds All My Memories - Smash Words Publishing 2022

வெளி இணைப்புக்கள்

நிர்வகிக்கும் மடலாடற் குழுக்கள்

வலைப்பதிவுகள்

"https://tamilar.wiki/index.php?title=நா._கண்ணன்&oldid=4921" இருந்து மீள்விக்கப்பட்டது