நாலாயிரக் கோவை
ஒட்டக்கூத்தர் இயற்றியனவாகக் கூறப்படும் நூல்களில் ஒன்று நாலாயிரக்கோவை. [1] இராசராசன் மீது 'கண்டன் கோவை' என்னும் நூலும் ஒட்டக்கூத்தர் பாடினார் என்பர். ஆனால் இந்த இரண்டு நூல்களும் கிடைக்கவில்லை. இவர் பாடிய மூவர் உலா அச்சிடப்பட்டுள்ளது. இவர் பாடிய தில்லை உலாவின் இறுதிப் பகுதி கிடைக்கவில்லை. இவர் பாடியதாகக் கூறப்படும் அந்தாதி நூல்களும் கிடைக்கவில்லை
அடிக்குறிப்பு
- ↑ மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1972, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பன்னிரண்டாம் நூற்றாண்டு, முதல் பாகம். சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. பக். 237.