நாய்கள் ஜாக்கிரதை
நாய்கள் ஜாக்கிரதை என்பது 2014ல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இந்தத் திரைப்படத்தை சக்தி சௌந்தர்ராஜன் இயக்க சிபிராஜ், அருந்ததி ஆகிய பலர் நடித்திருக்கின்றார்கள். இந்தத் திரைப்படத்தில் ஒரு நாய் தான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறது. இப்படத்துக்கு நிசார் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தத் திரைப்படத்துக்கு தரண் குமார் இசை அமைத்திருக்கின்றார். 2014 நவம்பர் 21 அன்று இந்த திரைப்படம் உலகம் முழுவதும் வெளியானது.[1][2]
நாய்கள் ஜாக்கிரதை | |
---|---|
படத்தின் சுவரொட்டி | |
இயக்கம் | சக்தி சௌந்தர் ராஜன் |
தயாரிப்பு | சத்யராஜ் மகேஸ்வரி சத்யராஜ் |
கதை | சக்தி சௌந்தர்ராஜன் |
இசை | தரண் குமார் |
நடிப்பு | சிபிராஜ் அருந்ததி |
ஒளிப்பதிவு | நிசார் ஷாபி |
படத்தொகுப்பு | குச்சிபுடி லதா பிரவீன் |
கலையகம் | நாதாம்பாள் பிலிம் பேக்டரி |
வெளியீடு | நவம்பர் 21, 2014 |
ஓட்டம் | 114 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |