நாமகிரிப்பேட்டை ஊராட்சி ஒன்றியம்
நாமகிரிப்பேட்டை ஊராட்சி ஒன்றியம், தமிழ்நாட்டின் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பதினைந்து ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். நாமகிரிப்பேட்டை ஊராட்சி ஒன்றியம் பதினெட்டு ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. இராசிபுரம் வட்டத்தில் உள்ள நாமகிரிப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம், நாமகிரிப்பேட்டையில் இயங்குகிறது.
மக்கள் வகைப்பாடு
2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, நாமகிரிப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 68,943 ஆகும். அதில் பட்டியல் இன மக்களின் தொகை 14,561 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 11,577 ஆக உள்ளது. [1]
ஊராட்சி மன்றங்கள்
நாமகிரிப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பதினெட்டு ஊராட்சி மன்றங்களின் விவரம்;[2]
- ஆயில்பட்டி
- ஈஸ்வரமூர்த்திபாளையம்
- கார்கூடல்பட்டி பிட் - I , II ,III
- மங்களபுரம்
- மத்துரூட்டி
- மூலக்குறிச்சி
- மூலபள்ளிப்பட்டி
- முள்ளக்குறிச்சி
- நாரைக்கிணறு
- நாவல்பட்டி
- ஊனந்தாங்கல்
- பச்சிதயம்பாளையம்
- பேரப்பன்சோலை
- பெருமாகவுண்டம்பாளையம்
- தொ.ஜேடர்பாளையம்
- திம்மநாயக்கன்பட்டி
- தொப்பப்பட்டி
- வடுகம் முனியப்பம்பாளையம்
வெளி இணைப்புகள்
- நாமக்கல் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம் பரணிடப்பட்டது 2015-07-08 at the வந்தவழி இயந்திரம்