நான்சி ஜெனிபர்

நான்சி ஜெனிபர், (Nancy Jennifer) முன்பு பேபி ஜெனிபர் என்று புகழ் பெற்றவர், தமிழ் மொழித் திரைப்படங்களில் தோன்றிய ஒரு இந்திய நடிகையாவார். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான பிறகு, ஜெனிபர் துணை வேடங்களிலும், முன்னணி பாத்திரங்களிலும் நடித்தார்.

நான்சி ஜெனிபர்
பிறப்பு23 ஏப்ரல் 1990 (1990-04-23) (அகவை 34)
சென்னை, இந்தியா
மற்ற பெயர்கள்பேபி ஜெனிபர்
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
1991-தற்போது வரை

தொழில்

நான்சி ஜெனிபர் குழந்தை நடிகையாக நடிக்கத் தொடங்கினார். இயக்குநர் வசந்தின் நேருக்கு நேர் (1997) என்ற திரைப்படத்தில் தனதுபெற்றோரின் விவாகரத்தால் சிக்கிய ஒரு சிறு குழந்தையாக நடித்திருந்தார். [1] பின்னர் அசோகவனம் , கில்லி (2004) உள்ளிட்ட படங்களில் தோன்றினார். கில்லி படத்தில் விஜய்யின் சகோதரியாகத் தோன்றினார்.[2] [3] 2000களின் பிற்பகுதியில், இவர் முன்னணி நடிகையானார். குறைந்த செலவில் தயாரிக்கப்பட்ட தோழா, புதிய பயணம் ஆகிய படங்களில் தோன்றினார். [4] [5] ஒரு முன்னணி நடிகையாக வெற்றியைப் பெற முடியாமல் போன பிறகு, ஜெனிபர் தொடர்ந்து ஒரு துணை நடிகையாகவும், ஸ்டார் விஜயின் தொகுப்பாளராகவும் தோன்றினார்.

சான்றுகள்

"https://tamilar.wiki/index.php?title=நான்சி_ஜெனிபர்&oldid=22977" இருந்து மீள்விக்கப்பட்டது