நாடோடி மன்னன் (1958 திரைப்படம்)
நாடோடி மன்னன் என்பது 1958 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் அதிரடி சாகசத் திரைப்படமாகும். இப்படத்தின் மூலம் ம. கோ. இராமச்சந்திரன் திரைப்பட இயக்குநராக ஆனார். இத்திரைப்படத்தில் அவர் பி. பானுமதி, எம். என். ராஜம், பி. சரோஜாதேவி ஆகியோருடன் இரட்டை வேடத்தில் நடித்தார். எம். என். நம்பியார், பி. எஸ். வீரப்பா, எம். ஜி. சக்கரபாணி, டி. கே. பாலச்சந்திரன், சந்திரபாபு ஆகியோர் துணை வேடங்களில் நடித்தனர்.
நாடோடி மன்னன் | |
---|---|
படிமம்:Nadodi Mannan 1958 film.jpg | |
இயக்கம் | ம. கோ. இராமச்சந்திரன் |
தயாரிப்பு | ம. கோ. இராமச்சந்திரன் எம். ஜி. ஆர். பிக்சர்ஸ் |
இசை | எஸ். எம். சுப்பைய்யா நாயுடு என். எஸ். பாலகிருஷ்ணன் ஆத்மானந்தன் |
நடிப்பு | எம். ஜி. ராமச்சந்திரன் எம். என். நம்பியார் சக்கரபாணி சந்திரபாபு பி. எஸ். வீரப்பா பானுமதி ஜி. சகுந்தலா பி. சரோஜாதேவி எம். என். ராஜம் |
வெளியீடு | ஆகத்து 22, 1958 |
ஓட்டம் | . |
நீளம் | 19830 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ஆக்கச்செலவு | ₹ 18 இலட்சம்[1] |
மொத்த வருவாய் | ரூ.1.10 கோடி. (மதுரை வீரன் திரைப்படத்தின் வருமானத்தை விட அதிகமான வருவாய் ஈட்டிய திரைப்படம்). |
18 இலட்சம் செலவில் தயாரிக்கப்பட்ட இப்படத்தை ராமச்சந்திரன் எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ் என்ற பதாகையின் கீழ் சக்ரபாணி மற்றும் ஆர். எம். வீரப்பனுடன் இணைந்து தயாரித்தார். திரைக்கதையை சி. குப்புசாமி, கே. சீனிவாசன், ப. நீலகண்டன் ஆகியோர் எழுதினர். உரையாடல் எழுதும் பொறுப்பை கண்ணதாசனும் ரவீந்தரும் ஏற்றனர். ஜி. கே. இராமு ஒளிப்பதிவு செய்ய, கே. பெருமாள், சி. பி. ஜம்புலிங்கம் ஆகியோர் படத்தொகுப்பை மேற்கொண்டனர். எஸ். எம். சுப்பையா நாயுடு, என். எஸ். பாலகிருஷ்ணன் ஆகியோர் படத்தின் பின்னணி இசை மற்றும் பாடல்கள் போன்றவற்றிற்கு இசையமைத்தனர். இப்படத்தில் இடம்பெற்ற "தூங்காதே தம்பி தூங்காதே", "தாடுக்காதே என்னை தடுக்காதே", "சும்மா கிடந்த நிலத்தை" மற்றும் "செந்தமிழே வணக்கம்" போன்ற பாடல்கள் பெருவெற்றி பெற்றன.
படத்தின் முதல் பாதி கருப்பு, வெள்ளையிலும், அடுத்த பாதி கோவாகலரிலிம் எடுக்கப்பட்டது. நாடோடி மன்னன் 22, ஆகத்து, 1958 இல் வெளியானது. நேர்மறையான விமர்சனத்தையும் வரவேற்பையும் பெற்றது. இது வணிகரீதியாக வெற்றியடைந்தது. மொத்தம் ஒரு கோடியே பத்து இலட்சம் வசூலித்தது. இதன்மூலம் இராமச்சந்திரன் நடித்த மதுரை வீரன் (1956) படத்திற்குப் பிறகு ஒரு கோடி வசூலித்த இரண்டாவது தமிழ்த் திரைப்படம் என்ற பெருமையைப் பெற்றது. இது வெள்ளி விழா படமாக மாறியது. நாடோடி மன்னன் தமிழ்த் திரையுலகில் வழிபாட்டு அந்தஸ்தைப் பெற்றது. இது இராமச்சந்திரனின் நடிப்பு மற்றும் அரசியல் வாழ்க்கை இரண்டிலும் ஒரு திருப்புமுனையாக மாறியது.
நடிகர்கள்
நடிகர் | கதாபாத்திரம் |
---|---|
ம. கோ. இராமச்சந்திரன் | மன்னர் மார்த்தாண்டன் & வீரங்கன் |
பானுமதி | மதனா |
பி. எஸ். வீரப்பா | ராசகுரு |
எம். என். ராஜம் | ராணி மனோகரி |
சரோஜா தேவி | ரத்னா |
எம். என். நம்பியார் | பிங்காளன் |
சந்திரபாபு | சகாயம் |
சகுந்தலா | நந்தினி |
முத்துலட்சுமி | நாகம்மா |
எம். ஜி. சக்கரபாணி | கார்மேகம் |
கே. ஆர். ராம்சிங் | வீரபாகு |
கே. எஸ். அங்கமுத்து | பாப்பா |
தயாரிப்பு
பிராங் லாயிட் இயக்கிய இப் ஐ வேர் கிங் என்ற அமெரிக்க வரலாற்றுப் படத்தைப் பார்த்த ம.கோ.இராவுக்கு அதுபோன்ற திரைப்படத்தை எடுக்கவேண்டும் என்ற ஆசை உண்டானது. அதன் பிறகு இப் ஐ வேர் கிங் படத்தையும் ரிச்சர்ட் தோர்பேவின் தி. பிரிசனர் ஆப் ஜெண்டா படத்தையும் மார்லன் பிராண்டோ நடித்த விவா சபடா என்ற படத்தையும் படக் குழுவினரைப் பார்க்கக வைத்தார். இந்த மூன்று படங்களின் பாதிப்பில் இருந்து நாடாடோ மன்னன் படம் உருவாக்கப்பட்டது.
இப்படத்தில் சரோஜாதேவி நாயகியாக அறிமுகப்படுத்தப்பட்டார். படப்பிடிப்பு தொடங்கி நடந்துவந்தது. ஒரு கட்டத்தில் படப்பிடிப்பில் ஒரு காட்சிக்கு பல டேக்குகள் எடுக்கபட்டன. ஒரே டேக்கில் காட்சியை நடித்துக் கொடுக்கும் பி. பானுமதிக்கு கோபம் ஏற்பட்டு படத்தில் இருந்து விலகுவதாக கூறினார். இதை ஏற்ற ம.கோ.இரா படத்தில் பானுமதியின் பாத்திரம் இறந்துவிடுவதைப் போல மாற்றினார்.
இப்படத்தை அப்போது 18 இலட்சசத்தில் மோ.கோ.இரா தயாரித்தார். இப்படம் ஓடினால் நான் மன்னன் இல்லையேல் நாடோடி என்று கூறிவிட்டு படத்தை வெளியிட்டார். படம் பெருவெற்றி ஈட்டியது.[2]
பாடல்
இப்படத்திற்கு எஸ். எம். சுப்பையா நாயுடு, என். எஸ். பாலகிருஷ்ணன் ஆகியோர் இசையமைத்தனர்.
பாடல்கள்[3][4] | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
# | பாடல் | பாடகர்(கள்) | நீளம் | |||||||
1. | "கண்ணில் வந்து மின்னல்போல்" | டி. எம். சௌந்தரராஜன், ஜிக்கி | 04:24 | |||||||
2. | "கண்ணோடு கண்ணு" | ஜிக்கி | 06:24 | |||||||
3. | "தூங்காதே தம்பி தூங்காதே" | டி. எம். சௌந்தரராஜன் | 03:12 | |||||||
4. | "உழைப்பதிலா உழைப்பை பெறுவதிலா இன்பம்" | சீர்காழி கோவிந்தராஜன் | 03:35 | |||||||
5. | "தடுக்காதே என்னை தடுக்காதே" | சந்திரபாபு, கே. ஜமுனா ராணி | 03:03 | |||||||
6. | "மனைத்தேடி மச்சான்" | ஜிக்கி | 04:38 | |||||||
7. | "சும்மா கிடந்த நிலத்தை" | டி. எம். சௌந்தரராஜன், பானுமதி ராமகிருஷ்ணா | 03:16 | |||||||
8. | "வருக வருக வேந்தே" (தமிழ்) | என். எல். கானசரஸ்வதி, P. S. Vaidehi | 06:01 | |||||||
9. | "நம்ம திராவிடரே குலக்கே" (கன்னடம்) | ஜிக்கி | 06:01 | |||||||
10. | "திராவிடம்மா" (மலையாளம்) | சாந்தா பி. நாயர் | 06:01 | |||||||
11. | "குடக்கல்ல கிம்புமா" (தெலுங்கு) | ஜிக்கி | 06:01 | |||||||
12. | "பாடுபட்டா தன்னாலே" | டி. வி. ரத்தினம் | 03:18 | |||||||
13. | "சம்மதமா நான் உங்கள் கூட வர சம்மதமா" | பி. பானுமதி | 02:29 | |||||||
14. | "செந்தமிழே வணக்கம்" | டி. எம். சௌந்தரராஜன் | 03:06 | |||||||
மொத்த நீளம்: |
01:01:29 |
மேற்கோள்கள்
- ↑ "Nadodi Mannan Golden Jubilee". mgrblog. http://mgrroop.blogspot.in/2008/08/nadodi-mannan-golden-jubilee-year-1958.html. பார்த்த நாள்: 2014-09-24.
- ↑ "எம்.ஜி.ஆரை மன்னனாக்கிய திரைப்படம்". இந்து தமிழ். https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/1104551-nadodi-mannan-movie-that-made-mgr-as-king.html. பார்த்த நாள்: 22 ஆகத்து 2023.
- ↑ "Nadodi Mannan" இம் மூலத்தில் இருந்து 17 June 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170617103215/http://gaana.com/album/nadodi-mannan.
- ↑ "Nadodi Mannan (Original Motion Picture Soundtrack)" இம் மூலத்தில் இருந்து 17 June 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170617103210/https://itunes.apple.com/us/album/nadodi-mannan-original-motion-picture-soundtrack/id954651738.
வெளி இணைப்புகள்
- நாடோடி மன்னன்
- நாடோடி மன்னன் பற்றி எம். ஜி. ஆர். பரணிடப்பட்டது 2020-02-23 at the வந்தவழி இயந்திரம்