நாகமேய்த படலம்

நாகமேய்த படலம் என்பது சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களை விளக்கும் திருவிளையாடல் புராணம் நூலின் 28 ஆவது படலமாகும் (செய்யுள் பத்திகள்: 1603 - 1625)[1]. இப்படலம் அங்கம் வெட்டின படலம் என்பதன் தொடர்ச்சியாக அமைந்துள்ளது.

சுருக்கம்

அனந்தகுண பாண்டியன் ஆட்சியில் மதுரையில் சைவம் பரவியிருப்பதைக் கண்ட சமணர்கள் அபிசார ஹோமம் என்பதை நடத்தினர். அந்த யாகத்திலிருந்து வெளிவந்த ஒரு அரக்கன் பாம்பாக உருவெடுத்து மதுரையை அழிக்க சென்றான்.

இறைவன் சோமசுந்ததர் பாண்டியனிடம் வில்லெடுத்து சென்று அந்த பாம்பை அழிக்க கூறினார். இறைவனின் ஆனைப்படி சென்ற பாண்டியன் அந்தப் பாம்பினை அழித்தான். அந்த பாம்பு இறக்கும் முன்பு விசம் கக்கியது, அந்த விசம் மதுரை அழிக்கும் முன் இறைவன் அதனை ஏவியவர்கள் மீதே திருப்பி அனுப்ப அது சமணர்களை அழித்தது. [2]

பாம்பு விழுந்த இடம் நாகமலை என்ற பெயரில் தற்போது உள்ளது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்


"https://tamilar.wiki/index.php?title=நாகமேய்த_படலம்&oldid=18417" இருந்து மீள்விக்கப்பட்டது