நவலிங்க லீலை

நவலிங்க லீலை [1] என்னும் நூல் 15 ஆம் நூற்றாண்டில் தோன்றிய நூல்களில் ஒன்று. உரைநூல் குறிப்புகளால் அறியப்படும் நூல்களில் ஒன்று. ஒன்பது லிங்கங்களின் திருவிளையாடல் கதைகளைக் கூறும் நூல். இது வீரசைவம் என்னும் சமயம் சார்ந்த நூல். இதன் ஆசிரியரின் பெயர் தெரியவில்லை.

நவலிங்க லீலை 72 பாடல்களைக் கொண்டது. இந்தப் பாடல்கள் அனைத்தும் ஞானாவரண விளக்கவுரையில் எடுத்துக் காட்டப்பட்டு மறுக்கப்பட்டிள்ளன. இந்த விளக்கவுரையில் அதன் ஆசிரியரான வெள்ளியம்பலவாணர் பல நூல்களிலிருந்து பாடல்கள் முழுவதையும் எடுத்துத் தருகிறார். உரூப சொரூப அகவல், சத்தி நிபாத அகவல் ஆகிய நூலகளுடன் [2] இந்த நூலின் பாடல்களும் தரப்பட்டுள்ளன. முன் பின் தரப்பட்டுள்ள தொடர்பு நூல்களானும், நடைப் பாங்குகளாலானும் இந்த நூல் 15 ஆம் நூற்றாண்டு எனக் கொள்ளப்படிகிறது.

"பரமன் உமைக்கு அருளியதைப் பிரபுதேவன் வசவேசற்குக் கருநாடத்தில் இயம்பினதைச் செந்தமிழால் அறைகுவன்" என்று சொல்லிக்கொண்டு நூல் தொடங்குகிறது. பாடல்களில் பெரும்பான்மை ஆறுசீர் விருத்தங்களால் ஆனது. சில சந்தக் கலிவிருத்தங்களும் நூலில் இடம்பெற்றுள்ளன.

அடிக்குறிப்பு

  1. மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1969, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பதினைந்தாம் நூற்றாண்டு,. சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. பக். 214. 
  2. இவை இரண்டும் காவை அம்பலவாணர் செய்த நூல்கள்
"https://tamilar.wiki/index.php?title=நவலிங்க_லீலை&oldid=17394" இருந்து மீள்விக்கப்பட்டது