நல்ல தங்காள் (1955 திரைப்படம்)
நல்ல தங்காள் (Nalla Thangal) 1955 ஆம் ஆண்டு வெளியான ஒரு இந்திய தமிழ்த் திரைப்படமாகும். இத் திரைப்படத்தின் இயக்குநர் பி. வி. கிருஷ்ண ஐயர்.[2] ஆர். எஸ். மனோகர், ஜி. வரலட்சுமி ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்திருந்தனர்.[1]
நல்ல தங்காள் | |
---|---|
இயக்கம் | பி. வி. கிருஷ்ண ஐயர் |
திரைக்கதை | ஏ. கே. வேலன் |
இசை | ஜி. இராமநாதன் |
நடிப்பு | ஆர். எஸ். மனோகர் ஜி. வரலட்சுமி ஏ. பி. நாகராஜன் ஜே. பி. சந்திரபாபு |
ஒளிப்பதிவு | வாசுதேவ ராவ், கர்நாடகி |
படத்தொகுப்பு | பால் ஜி. யாதவ் |
கலையகம் | மதறாஸ் மூவிடோன் |
வெளியீடு | 29 திசம்பர் 1955(இந்தியா)[1] |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள், தயாரிப்புக் குழு
பின்வரும் பட்டியல்களிலுள்ள விபரம் பிலிம் நியூஸ் ஆனந்தன் தரவுத் தளத்திலிருந்து எடுக்கப்பட்டது.[1]
நடிகர், நடிகையர்
- ஆர். எஸ். மனோகர்
- ஜி. வரலட்சுமி
- ஏ. பி. நாகராஜன்
- மாதுரி தேவி
- ஜே. பி. சந்திரபாபு
- வி. எம். ஏழுமலை
- ஈ. வி. சரோஜா
- மோகனா
தயாரிப்புக் குழு
- தயாரிப்பாளர் =
- இயக்குநர் = பி. வி. கிருஷ்ண ஐயர்
- திரைக்கதை, வசனம் = ஏ. கே. வேலன்
- ஒளிப்பதிவு = வாசுதேவ ராவ், கர்நாடகி
- படத்தொகுப்பு = பால் ஜி. யாதவ்
- கலை = ஜெயவந்த் எஸ். கே.
- நட்டுவாங்கம் = குமாரி பாரதி, மாதவன், பலராமன்
- கலையகம் = பிலிம் சென்டர்
தயாரிப்பு
நல்லதங்காள் என்ற பெயரில் 1935 ஆம் ஆண்டு ஒரு திரைப்படம் வெளியானது. 1955 முற்பகுதியில் இதே கருத்துள்ள தலைப்புடன் நல்ல தங்கை என்ற திரைப்படம் வெளியானது.
பாடல்கள்
திரைப்படத்துக்கு இசையமைத்தவர் ஜி. இராமநாதன். மாயூரம் வேதநாயகம் பிள்ளை, அ. மருதகாசி ஆகியோர் பாடல்களை இயற்றியிருந்தனர். ஜே. பி. சந்திரபாபு ஒரு பாடல் பாடியிருக்கிறார். சீர்காழி கோவிந்தராஜன், ஜி. இராமநாதன், டி. பி. இராமச்சந்திரன், டி. எம். சௌந்தரராஜன், வி. டி. இராஜகோபாலன், பி. லீலா, என். எல். கானசரஸ்வதி, கே. ஜமுனாராணி, உடுதா சரோஜினி, நிர்மலா, ஏ. பி. கோமளா, டி. வி. இரத்தினம், ஏ. ஜி. இரத்னமாலா ஆகியோர் பின்னணி பாடியுள்ளனர்.[3]
எண். | பாடல் | பாடகர்/கள் | பாடலாசிரியர் | கால அளவு |
---|---|---|---|---|
1 | கண்ணின் கருமணியே | சீர்காழி கோவிந்தராஜன் & பி. லீலா | 03:40 | |
2 | இவளே அவளே | என். எல். கானசரஸ்வதி | 04:40 | |
3 | வாடாத மரிக்கொழுந்தே | டி. பி. இராமச்சந்திரன் & கே. ஜமுனாராணி | 02.50 | |
4 | பச்சை படகு விரித்தது போல் | கே. ஜமுனாராணி, உடுதா சரோஜினி & நிர்மலா | 02:02 | |
5 | இத்தனை நாளா எங்கேடி போனே | ஜி. இராமநாதன் & கே. ஜமுனாராணி | 02:09 | |
6 | கோமள செழுந்தாமரை எழில் மேவிய | பி. லீலா, ஏ. பி. கோமளா, ஏ. ஜி. இரத்னமாலா டி. வி. இரத்தினம் & உடுதா சரோஜினி, |
அ. மருதகாசி | 02:37 |
7 | பொன்னே புதுமலரே | டி. எம். சௌந்தரராஜன் | அ. மருதகாசி | 03:30 |
8 | கள்ளமில்லா வெள்ளை மனம் காட்டும் | 01:32 | ||
9 | உனைக் கண்டு மயங்காத | ஜே. பி. சந்திரபாபு | 01:18 | |
10 | திருவுள்ளம் இரங்காதா | சீர்காழி கோவிந்தராஜன் | அ. மருதகாசி | 02:20 |
11 | அடி சீனி சக்கரை கட்டி | வி. டி. ராஜகோபாலன் | ||
12 | அன்னையும் தந்தையும் இல்லாத | பி. லீலா | அ. மருதகாசி | 03:31 |
13 | திங்களொடு கங்கையை | 01:58 | ||
14 | கோமள செழுந்தாமரை எழில் மேவிய (சோகம்) |
02:37 |
உசாத்துணை
- ↑ 1.0 1.1 1.2 சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 23 அக்டோபர் 2004 இம் மூலத்தில் இருந்து 30 March 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170330125809/http://www.lakshmansruthi.com/cineprofiles/1955-cinedetails19.asp.
- ↑ "Nalla Thangal (1955 - Tamil)". gomolo.com இம் மூலத்தில் இருந்து 16 மார்ச் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120316223715/http://www.gomolo.com/nalla-thangal-movie-cast-crew/9170. பார்த்த நாள்: 30 மார்ச் 2017.
- ↑ கோ. நீலமேகம். திரைக்களஞ்சியம் தொகுதி - 1. மணிவாசகர் பதிப்பகம், சென்னை 108 (Ph:044 25361039). முதல் பதிப்பு டிசம்பர் 2014. பக். 94.