நறுங்குறிஞ்சி வியாக்கியானம்

நறுங்குறிஞ்சி வியாக்கியானம் [1] என்னும் விருத்தியுரை நூல் 10 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டது. திருமங்கையாழ்வார் 8 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். இவரது பாடல்களில் ஒன்று "மைவண்ண நறுங்குறிஞ்சி" என்று தொடங்குகிறது. இந்த ஒரு பாடலுக்கு மட்டும் எழுதப்பட்ட உரைநூலாக உள்ளது இந்த நூல். இந்த விரிவுரையை எழுதியவர் பட்டர். இவர் வாழ்ந்த காலம் 16 ஆம் நூற்றாண்டு. இந்த விரிவுரை 800 எழுத்துக்களைக் [2] கொண்டது. டெம்மி தாள் அளவில் 38 பக்கங்கங்கள் கொண்ட நூலாக இது உள்ளது.

திருமங்கையாழ்வார் பாடல்

மைவண்ண நறுங்குஞ்சி குழல்பின் தாழ

மகரம்சேர் குழையிருபா டிலங்கி யாட,

எய்வண்ண வெஞ்சிலையே துணையா இங்கே

இருவராய் வந்தாரென் முன்னே நின்றார்

கைவண்ணம் தாமரைவாய் கமலம் போலும்

கண்ணிணையும் அரவிந்தம் அடியும் அதே,

அவ்வண்ணத் தவர்நிலைமை கண்டும் தோழீ.

அவரைநாம் தேவரென் றஞ்சி னோமே [3]

பட்டர் விருத்தியில் சிறு பகுதி

அடிக்குறிப்பு

  1. மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1973, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பன்னிரண்டாம் நூற்றாண்டு, இரண்டாம் பாகம். சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. பக். 213. 
  2. கிரந்தங்கள்
  3. நாலாயிர திவ்வியப் பிரபந்தம் பாடல் எண் 2072