நன்னூல் உரைநூல்கள்

நன்னூல் என்னும் தமிழ் இலக்கணநூல் 13 ஆம் நூற்றாண்டில் பவணந்தி முனிவர் இயற்றியது. இதற்கு உரைநூல்கள் சில தோன்றியுள்ளன. அவை வெவ்வேறு காலங்களில் தோன்றியவை.[1]

மயிலைநாதர் உரை

இவ்வுரையின் காலம் 14 ஆம் நூற்றாண்டு. நன்னூல் ஆசிரியர் பவணந்தி முனிவரைப் போலவே மயிலைநாதரும் சமணர் ஆவார். சீயகங்கன் மரபினையும், சமண ஆசிரியர்களையும் பெரிதும் போற்றுபவர்.

சங்கர நமச்சிவாயர் விருத்தி உரை

இவ்வுரையின் காலம் 18 ஆம் நூற்றாண்டு. சங்கர நமச்சிவாயர் சைவர். இவரது உரை பெரிதும் போற்றப்பட்டது. சங்கர நமச்சிவாயர் உரையின் துணையோடு மேலும் சிலர் காண்டிகை உரையும் விருத்தியுரையும் எழுதியுள்ளனர்.

சிவஞான முனிவர் விருத்தியுரை

இவ்வுரையின் காலம் 18 ஆம் நூற்றாண்டு சங்கர நமச்சிவாயர் விருத்தியுரைக்கு மேலும் விளக்கங்கள் தரும் உரை இது. சிவஞான முனிவர் திருவாடுதுறை ஆதீன சிவாசாரியார்.

பிற உரைநூல்கள்

சங்கர நமச்சிவாயர் உரையின் துணையோடு மேலும் சிலர் காண்டிகை உரையும் விருத்தியுரையும் எழுதியுள்ளனர்.

அவற்றுள் குறிப்பிடத் தக்கவை:

  • முகவை இராமானுச கவிராயர் உரை [2]
  • வேதகிரி முதலியார் உரை [3]
  • விசாகப்பெருமாள் ஐயர் உரை [4]
  • ஆறுமுக நாவலர் காண்டிகை உரை
  • பவானந்தம் பிள்ளை உரை
  • வை. மு. சடகோப ராமானுசாசாரியார் உரை. இது பள்ளி மாணவர்களுகென்றே எழுதப்பட்ட உரை.

மற்றும் ஆசிரிய நிகண்டு செய்த ஆண்டியப்பப் புலவரும், கூழங்கைத் தம்பிரான் என்பவரும் உரை செய்துள்ளனர் எனத் தெரிகிறது. இவை கிடைக்கவில்லை.

இதனையும் காண்க

அடிக்குறிப்பு

  1. மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1970, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பதின்மூன்றாம் நூற்றாண்டு,. சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. பக். 132. 
  2. பதிப்பு 1847
  3. பதிப்பு 1851
  4. பதிப்பு 1880
"https://tamilar.wiki/index.php?title=நன்னூல்_உரைநூல்கள்&oldid=15709" இருந்து மீள்விக்கப்பட்டது