நடராஜன் பெரியசாமி

நடராஜன் பெரியசாமி (Nadarajan Periyasamy, பிறப்பு: நவம்பர் 19, 1963) மலேசியாவைச் சார்ந்த இந்தியர் ஆவார். இவர் ஓர் இருசக்கர வாகன வீரர். மலேசியாவின் பினாங்கு பகுதியைச் சேர்ந்த இவர் மலேசியத் தமிழ்ப் பள்ளிகளில் மாணவர்களுக்கு தன்முனைப்புப் பயிற்சிப் பட்டறைகள் நடத்தி வருகிறார். இவர் சக்ஸஸ் பி. நடா எனும் பெயரால் அறியப்படுகிறார்.

நடராஜன் பெரியசாமி
நடராஜன் பெரியசாமி
இயற்பெயர்/
அறியும் பெயர்
நடராஜன் பெரியசாமி
பிறந்ததிகதி (1963-11-19)நவம்பர் 19, 1963
பிறந்தஇடம் மலேசியா
தேசியம் மலேசியத் தமிழர்
அறியப்படுவது இருசக்கர வாகனச் சாதனையாளர்
துணைவர் சாமுண்டீஸ்வரி

இருசக்கரவாகனச் சாதனைகள்

2007

  • நடராஜன் பெரியசாமி தனது முதல் சாதனையை 5 செப்டம்பர் 2007 ஆம் ஆண்டு செய்தார். மலேசியாவின் ஜோகூரிலுள்ள கெல்லாங் பாத்தா பகுதியிலிருந்து 933 கிலோமீட்டர்கள் தொலைவில் தாய்லாந்து எல்லையில் உள்ள புக்கிட் காயு ஈத்தாம் பகுதிக்கு 1500 சிசி திறனுள்ள "ஹோண்டா" வாகனத்தின் மூலம் (1500 cc Honda Gold Wing Touring motorcycle ) பத்து மணிகள் 45 நிமிடங்கள் நேரத்தில் கடந்தார்.[1]

2010

  • பெரியசாமி தனது இரண்டாவது சாதனையை 26 டிசம்பர் 2010 ஆம் ஆண்டு அன்று நிகழ்த்தினார். மிக நீண்ட நேரம் இருசக்கரம் ஓட்டும் சாதனையை செப்பாங் எஃப் 1 மைதானத்தில் 875 கிலோமீட்டர்கள் தொலைவை 12 மணிகளில் சுற்றிவந்தார். இச்சாதனையை காலை ஆறு மணிக்குத் தொடங்கி மாலை ஆறு மணி வரை 165 சுற்றுகளை நிறைவு செய்ததன் மூலம் நிகழ்த்தினார்.[1]

2011

  • 2011 ஆம் ஆண்டு பிப்ரவரி 11 அன்று ரிப்ளி பிலீவ் இட் ஆர் நாட் (Ripley’s Believe It or Not) சாதனைக்காக மலேசியாவின் ஜோகூர் பாரு பகுதியிலிருந்து தாய்லாந்து நாட்டின் பட்டாயா பகுதிக்கு 1410 கிலோமீட்டர்கள் தொலைவை 18 மணிகள் நேரத்தில் கடந்தார்.[1]
  • 2011 ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 980 கிலோமீட்டர்கள் தொலைவை 8 மணி நேரத்தில் நிகழ்த்தினார். இச்சாதனை தாய்லாந்து அரசால் அங்கீகரிக்கப்பட்டது. தாய்லாந்து அரசரின் 85 வது பிறந்தநாள் விழாவுக்காக இச்சாதனை செய்யப்பட்டது.

2012

  • 2012 ஆம் ஆண்டு அக்டோபர் 4 மற்றும் 5 ஆம் தியதிகளில் "நீண்ட தொலைவு நின்று கொண்டு இருசக்கரம் ஓட்டும்" சாதனையைச் செய்தார். மலேசியா நாட்டின் ஜோகூர் பாரு முதல் "கிராபி" வரையிலான 1400 கிலோமீட்டர்கள் தொலைவை 19 மணி நேரத்தில் கடந்து இச்சாதனை நிகழ்த்தப்பட்டது. இந்நிகழ்வு மலேசியா, சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகள் ஒருங்கிணைந்து நடத்திய ஒன்றாகும். இச்சாதனை மலேசிய அரசின் சாதனைப் புத்தகத்தில் (Malaysian Book of Records) இடம் பெற்றது.

2014

  • 10 ஏப்ரல் 2014 ஆம் ஆண்டு 5000 கிலோமீட்டர்கள் தொலைவை ஐந்து நாட்களில் கடந்து சாதனை புரிந்தார்.[2]

வாழ்க்கை

இவர் மலேசியாவின் பினாங்கு பகுதியில் வசித்து வருகிறார். இவரது மனைவியின் பெயர் சாமுண்டீஸ்வரி, மகள் நிஷாந்தினி.

காணொளிகள்

வெளி இணைப்புகள்

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=நடராஜன்_பெரியசாமி&oldid=27004" இருந்து மீள்விக்கப்பட்டது