நச்சினார்க்கினியர்
நச்சினார்க்கினியர் (Nacchinarkiniyar) இடைக்கால தமிழ் உரையாசிரியர்களுள் முக்கியமான ஒருவர். தொல்காப்பியத்துக்கு எழுதப்பட்ட உரைகளில் நச்சினார்க்கினியரின் உரை முக்கியமானதாகும். இவர் தொல்காப்பியத்தைத் தவிர்த்து கலித்தொகை, குறுந்தொகையில் ஒரு பகுதி, பத்துப்பாட்டு, சீவக சிந்தாமணி என்பவற்றுக்கும் உரைகள் எழுதியுள்ளார். இவர் தொல்காப்பியம் முழுவதற்குமே உரை எழுதினார்.[1][2][3] குறுந்தொகையில் உள்ள முதல் 380 பாடல்களுக்குப் பேராசிரியர் உரை எழுதினார் என்றும், எஞ்சிய 20 பாடல்களுக்கு மட்டுமே நச்சினார்க்கினியார் உரை எழுதி நிறைவு செய்தார் என்றும் குறுந்தொகை பதிப்பாசிரியர் குழு கூறுகிறது.[4]
இவரைப்பற்றிய செய்திகள்
மேற்கோள்
- தமிழ் இணையக் கல்விக்கழகம், பத்துப்பாட்டு, நச்சினார்க்கினியார் உரை
- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினான்காம் நூற்றாண்டு, பதிப்பு 2005
அடிக்குறிப்பு
- ↑ நச்சினார்க்கினியர் - தமிழ் இணையக் கல்விக் கழகம்
- ↑
- பாரத்தொல் காப்பியமும் பத்துப்பாட் டுங்கலியும்
- ஆரக் குறுந்தொகையில் ஐஞ்ஞான்கும் – சாரத்
- திருத்தகு மாமுனிசெய் சிந்தா மணியும்
- விருத்திநச்சி னார்க்கினிய மே. (பழம்பாடல்)
- ↑
கரை பெற்றதோர் பச லட்சணமான தொல்காப்பியமும்
தரை முற்றும் போற்றிய சிந்தாமணியும் தமிழ்ச் சங்கத்தில்
நிரை பெற்று உயர் பத்துப்பாட்டும் விளங்க நிச உரையை
வரை நச்சினார்க்கினியன் ஐயன் பாண்டி மண்டலமே. (பாண்டிக்கோவை) - ↑ குறுந்தொகை, சாந்தி சாதனா உரிமை, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியீடு, இரண்டாம் பதிப்பு 1982
- ↑ 12 ஆம் நூற்றாண்டு அனபாயன் என்னும் சோழமன்னன் பெயரை இவர் குறிப்பிடுவதால் (தொல்காப்பியம் 482 உரை) 12 ஆம் நூற்றாண்டுக்குப் பிற்பட்டவர்.
- ↑ 13 ஆம் நூற்றாண்டு பெரும்பற்றப்புலியூர் நம்பியின் திருவிளையாடல் பாடலை இவர் கலித்தொகை 92 உரையில் குறிப்பிடுவதால் 13 ஆம் நூற்றாண்டுக்குப் பிற்பட்டவர்.
- ↑ இளம்பூரணர், பேராசிரியர், சேனாவரையர்,ஆளவந்தபிள்ளையாசிரியர் முதலிய உரையாசிரியர்கள் இவருடைய உரையில் எடுத்துக் கூறப்பட்டிருத்தலின் அவர்களுக்கும், திருமுருகாற்றுப்படையுரையில் பரிமேலழகர் கொள்கையை மறுத்திருத்தலின் அவருக்கும்இவர் பிற்காலத்தவரென்று தெரிகின்றது. http://www.tamilvu.org/slet/l1100/l1100pd1.jsp?bookid=20&auth_pub_id=68&pno=722
- ↑ வேதபோதன் நச்சினார்க்கினியன் எச்சில் நறுந்தமிழ் நுகர்வர் நல்லோர் (பழம்பாடல் ஒன்றின் ஈற்றுப் பகுதி)