நசீர் அகமது
ஹபீஸ் நசீர் அகமது (Hafis Nazeer Ahamed, பிறப்பு: 16 ஏப்ரல் 1961) என அழைக்கப்படும் அகமது நசீர் செய்னுலாப்தீன் (Agamed Nazeer Zainulabdeen)[1], இலங்கை முசுலிம் அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும்,[2] முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சரும் ஆவார்.[3] இவர் 2015, பெப்ரவரி 6 இல் கிழக்கு மாகாணத்தின் 3-ஆவது முதலமைச்சராக சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசு கட்சியின் சார்பில் தெரிவு செய்யப்பட்டார்.
அகமது நசீர் செய்னுலாப்தீன் | |
---|---|
අහමඩ් නසීර් සයිනුලාබ්දීන් Ahamed Nazeer Zainulabdeen | |
சுற்றுச்சூழல் அமைச்சர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 18 ஏப்ரல் 2022 | |
குடியரசுத் தலைவர் | கோட்டாபய ராஜபக்ச ரணில் விக்கிரமசிங்க |
பிரதமர் | மகிந்த ராஜபக்ச ரணில் விக்கிரமசிங்க தினேஷ் குணவர்தன |
முன்னையவர் | மகிந்த அமரவீர |
கிழக்கு மாகாணசபையின் 3வது முதலமைச்சர் | |
பதவியில் 6 பெப்ரவரி 2015 – 30 செப்டம்பர் 2017 | |
முன்னையவர் | நஜீப் அப்துல் மஜீத் |
இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 20 ஆகத்து 2020 | |
தொகுதி | மட்டக்களப்பு மாவட்டம் |
கிழக்கு மாகாண விவசாய, கால்நடை உற்பத்தி, கிராமியக் கைத்தொழில் அபிவிருத்தி, மீன்பிடி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் | |
பதவியில் செப்டம்பர் 2012 – பெப்ரவரி 2015 | |
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் செப்டம்பர் 2012 | |
தொகுதி | மட்டக்களப்பு மாவட்டம் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | ஏப்ரல் 16, 1961 ஏறாவூர், மட்டக்களப்பு மாவட்டம் |
தேசியம் | இலங்கையர் |
அரசியல் கட்சி | சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் |
பிற அரசியல் தொடர்புகள் | ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி |
வாழிடம்(s) | ஏறாவூர், மட்டக்களப்பு |
வேலை | அரசியல்வாதி |
தொழில் | பொறியியலாளர் |
வாழ்க்கைக் குறிப்பு
நசீர் அகமது முசுலிம் காங்கிரசு கட்சியின் சார்பில் 1994 நாடாளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.[4]
கெய்ரோ ஜன்சம்சு பல்கலைக்கழகத்திலும், சவூதி அரேபியா பெற்றோலியப் பல்கலைக்கழகத்திலும் கல்வி கற்று மண் பொறியியலில் பட்டம் பெற்றார்.[4] அரசியலில் நுழைந்த நசீர் ஆரம்பத்தில் சிறீலங்கா முசுலிம் காங்கிரசின் வெளிவிவகாரங்களுக்குப் பொறுப்பாளராகப் பணியாற்றினார்.[4] பின்னர் 2005 முதல் 2009 வரையில் அரசுத்தலைவர் மகிந்த ராசபக்சவின் ஆலோசகராகப் பணியாற்றினார்.[4]
அரசியல்
2012, செப்டம்பர் 8 இல் இடம்பெற்ற மாகாணசபைத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் முசுலிம் காங்கிரசின் வேட்பாளராகப் போட்டியிட்டு 11,401 விருப்பு வாக்குகள் பெற்று மாகாணசபை உறுப்பினரானார்.[1] முசுலிம் காங்கிரசு சார்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஒரே ஒரு முசுலிம் காங்கிரசு உறுப்பினர் இவராவார். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி 15 இடங்களைக் கைப்பற்றிய நிலையில், சிறீலங்கா முசுலிம் காங்கிரசின் ஆதரவுடன் ஆட்சியைக் கைப்பற்றியது.[5] முசுலிம் காங்கிரசுடன் சுதந்திரக் கூட்டணி செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் முதல் இரண்டரை ஆண்டுக் காலத்திற்கு சுதந்திரக் கூட்டணியின் உறுப்பினர் நஜீப் அப்துல் மஜீத் முதலமைச்சரானார்.[6][7] முசுலிம் காங்கிரசு மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி இணைந்த கிழக்கு மாகாண அமைச்சரவையில் நசீர் அகமதுவுக்கு விவசாய, கால்நடை உற்பத்தி, கிராமியக் கைத்தொழில் அபிவிருத்தி, மீன்பிடி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.
இரண்டரை ஆண்டுகளின் பின்னர் 2015 பெப்ரவரி 6 இல் முசுலிம் காங்கிரசின் ஹாபிஸ் நசீர் அகமது கிழக்கு மாகாணத்தின் 3-ஆவது முதலமைச்சராக நியமிக்கப்பட்டார்.[8] கிழக்கு மாகாணசபை 2017 செப்டம்பர் 30 இல் கலைக்கப்பட்டது.[9]
நசீர் அகமது 2020 நாடாளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் முசுலிம் காங்கிரசின் வேட்பாளராகப் போட்டியிட்டு நாடாளுமன்றத்திற்கு முதல் தடவையாகத் தெரிவு செய்யப்பட்டார்.[10][11][12]
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 "Preferences". இலங்கைத் தேர்தல் திணைக்களம் இம் மூலத்தில் இருந்து 2014-04-29 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140429044507/http://www.slelections.gov.lk/pdf/ele_2012/Candidates/Trinco_FREV.pdf.
- ↑ "Directory of Members: Naseer Ahamed". Sri Jayawardenepura Kotte, Sri Lanka: இலங்கை நாடாளுமன்றம். https://www.parliament.lk/en/members-of-parliament/directory-of-members/viewMember/3397. பார்த்த நாள்: 7 September 2020.
- ↑ "PARLIAMENTARY GENERAL ELECTION - 02-04-2004". Sri Lanka Department of Elections இம் மூலத்தில் இருந்து 4 மார்ச் 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100304015514/http://www.slelections.gov.lk/pdf/Preference2004GE.pdf. பார்த்த நாள்: 4 August 2011.
- ↑ 4.0 4.1 4.2 4.3 "சர்ச்சைகளுக்கு மத்தியில் கிழக்கு முதலமைச்சராக நஸீர் பத்வியேற்பு". வீரகேசரி. 7 பெப்ரவரி 2015.
- ↑ Ferdinando, Shamindra (18 செப்டம்பர் 2012). "President bags East with Hakeem's help". தி ஐலண்டு இம் மூலத்தில் இருந்து 2014-09-17 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140917113609/http://www.island.lk/index.php?page_cat=article-details&page=article-details&code_title=61840.
- ↑ Bandara, Kelum (20 செப்டம்பர் 2012). "PC polls: SLMC to share Chief Minister Post in East". டெய்லிமிரர். http://www.dailymirror.lk/opinion/172-opinion/22063-pc-polls-slmc-to-share-chief-minister-post-in-east.html.
- ↑ "Majeed sworn in as Eastern CM". டெய்லிமிரர். 18 செப்டம்பர் 2012. http://www.dailymirror.lk/news/22010--majeed-sworn-in-as-eastern-cm.html.
- ↑ "கிழக்கு மாகாண முதல்வரானார் ஹாபிஸ் நசீர்". தமிழ்மிரர். 6 பெப்ரவரி 2015. http://www.tamilmirror.lk/139282.
- ↑ கடந்த ஐந்து ஆண்டுகளில் கிழக்கு மாகாண சபை - ஓர் பார்வை, பிபிசி, 1 அக்டோபர் 2017
- ↑
- ↑ "General Election 2020: Preferential votes of Batticaloa District". Ceylon Today (Colombo, Sri Lanka). 7 August 2020 இம் மூலத்தில் இருந்து 27 அக்டோபர் 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20201027100203/https://ceylontoday.lk/news/general-election-2020-preferential-votes-of-batticaloa-district. பார்த்த நாள்: 7 September 2020.
- ↑ Parasuraman, Lakshme (9 August 2020). "Over 60 new faces in Parliament". Sunday Observer (Colombo, Sri Lanka). http://www.sundayobserver.lk/2020/08/09/news-features/over-60-new-faces-parliament. பார்த்த நாள்: 7 September 2020.