நகுலன் (இ. மே 17, 2007) தமிழ் எழுத்தாளர். டி. கே. துரைசாமி என்ற இயற்பெயர் கொண்ட நகுலன் பிறந்தது தமிழ்நாட்டில் உள்ள கும்பகோணத்தில் ஆனாலும் இறுதிவரை வாழ்ந்தது கேரளத்தின் திருவனந்தபுரத்தில். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றவர். ஆங்கிலத்தில் முதுகலையும் ஆராய்ச்சிப் பட்டமும் பெற்றவர். திருவனந்தபுரம் இவானியர் கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

நகுலன்
நகுலன்
இயற்பெயர்/
அறியும் பெயர்
நகுலன்
பிறந்ததிகதி ஆகஸ்ட் 21, 1921
இறப்பு மே 17, 2007

இவருடைய ஆங்கில படைப்புகளை இயற்பெயரிலும், தமிழ் படைப்புகள் புனைப் பெயரிலும் எழுதி வந்தார். தமிழ்ச் சிறுகதைகளில் பல புதிய பரிசோதனைகள் செய்தவர். பழந்தமிழ் இலக்கியத்திலும் நவீன ஆங்கில இலக்கியத்திலும் மிகுந்த ஈடுபாடுகொண்டவர். இவர் தொகுத்த 'குருஷேத்திரம்' இலக்கியத் தொகுப்பு, தமிழில் மிக முக்கியமானதாகும்.[சான்று தேவை] விளக்கு விருது, ஆசான் விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர் நகுலன். நகுலனின் கவிதைகள் பெரும்பாலும் மனம் சார்ந்தவைகள் அவர் மனிதனின் இருப்பு சார்ந்தே கவிதைகளை வெளிப்படித்தியுள்ளார்.

தொழில் வாழ்க்கை

இவர் ஒரு இந்திய கவிஞராகவும், நாவலாசிரியர், மொழிபெயர்ப்பாளர், சிறுகதை எழுத்தாளராகவும் போன்ற பல பரினாமங்களில் தன்னை வெளிப்படுத்தியுள்ளார். தமிழ் மற்றும் ஆங்கிலம் இரு மொழிகளிளும் கவிதைகள் எழுதியுள்ளார். கவிதை எழுதுவதிலும், புகைப்படம் வரைவதிலும் சிறந்தவர் மேலும் அவர் வரையும் புகைப்படங்கள் அவரது அடிமனதில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் எண்ணங்களை வெளிப்படுத்துவதாக உள்ளது. இவரது கவிதைகளை இயல்பு நடையில் எழுதுவதில் புகழ்பெற்றவர்.

இவர் 'எழுத்து' என்னும் இதழில் சி. எஸ். செல்லப்பா அவர்களால் தொடங்கப்பட்ட இதழில் தனது நாற்பது வயதில் எழுதத் துவங்கினார். அவர் 'ஒரு கதை' மற்றும் 'ஆறு கவிதை' புத்தகங்கள் ஆங்கிலத்திலும், 'ஒன்பது கதை' மற்றும் 'ஐந்து கவிதை' புத்தகங்கள் தமிழ் மொழியிலும் எழுதியுள்ளார். அவர் எஸ். நாயர் என்ற புனை பெயரிலும் சில கதை மற்றும் கவிதை படைப்புகள் எழுதியுள்ளார்.[சான்று தேவை]

குறிப்பிடத்தக்க படைப்புகள்

  • நகுலன் கவிதைகள்
  • நாய்கள்
  • ரோகிகள்
  • வாக்குமூலம்
  • மஞ்சள்நிறப் பூனை.

இதுவரை வெளியாகிவுள்ள நகுலனின் கவிதை நூல்கள்:

  1. கோட் ஸ்டான்ட் கவிதைகள் (1981)
  2. மூன்று,ஐந்து (1987)
  3. இரு நீண்ட கவிதைகள் (1991)
  4. நகுலன் கவிதைகள் (2001).

1972ஆம் ஆண்டு எழுதிய நினைவுப் பட்டை நீலக்கல் என்னும் நாவல் அவரது தமிழ் இலக்கிய வரலாற்றின் முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது. மேலும் அவரை சிறந்த எழுத்தாளராகவும் பெயர் பெற்றுத்தந்தது. அவருக்கு ஆசான் நினைவு விருது தமிழ் கவிதைக்காக 1983ஆம் ஆண்டு பெற்றார்.

சிறுவயது வாழ்க்கை

அவர் 1921ஆம் ஆண்டு தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் பிறந்தார், மேலும் தன்னுடைய பதினான்கு வயதில் திருவனந்தபுரத்திற்கு குடிபெயர்ந்தார். அதன் பிறகு தமிழ் இலக்கியத்தில் முதுநிலை பட்டம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பயின்றார், ஆங்கில இலக்கியத்தில் முதுநிலை பட்டம் கேரளப் பல்கலைக்கழகத்தில் பயின்றார். வெர்ஜினா உள்ஃப் பற்றி ஆய்வு செய்து அதில் முதுநிலை பட்டம் பெற்றார்.

அவருடைய வீடு கோல்ஃப் லிங்ஸ் கௌடியர் என்னும் இடத்தில் உள்ளது. அங்கு பல எழுத்தாளர்கள் மற்றும் அறிஞர்கள் வந்து இவருடன் கலந்துரையாடல் செய்து பின்பு தமிழ் இலக்கியத்தில் ஆர்வம் கொண்டு அவர்களும் எழுதத் தொடங்கினார்கள். இவர் கவிஞராகவும், மொழிபெயர்ப்பாளராகவும், விமர்சகராகவும், பாடல் திரட்டுபவராகவும், நாவல் ஆசிரியராகவும், குறுகிய கதை எழுத்தாளராகவும் பணியாற்றியுள்ளார்.

தொழில் சார்ந்த முன்னேற்றம்

அவர் 1960களில் இருந்துதான் தீவிரமாக எழுதத் தொடங்கினார். அவருடைய மாணவர்கள் பலர் தமிழ் இலக்கியத்தில் எழுதுவதற்கு இவரே தூண்டுதலாக இருந்தார். அவரது நண்பர் கானா சுப்பிரமணியம் என்பவரின் தூண்டுதலின் பெயரில் தமிழ் இலக்கியம் பயிலத் தொடங்கினார். இவரது ஆல்டர்-ஈகோ என்னும் நாவலில் வரும் கதாப்பாத்திரம் நவீன எதிர்மறை நாயகனாக அறிமுகப்படுத்தியது தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒரு புதிய முயற்சி ஆகும். தனது மனதில் தோன்றும் கதாப்பத்திரம் மற்றும் எண்ணங்களை வெளிப்படையாக எழுதும் ஆற்றலை முதன் முதலாக வெளிப்படுதியதில் இவரும் ஒருவர். 1973ஆம் ஆண்டு வெட்ஸ் ஃபார் தி விண்டு என்னும் ஆங்கில நாவலை எழுதியுள்ளார்.

இவருடைய படைப்புகளிள் இராஜா வெம்பலா என்னும் ஆங்கில கவிதை மீக நீண்ட கவிதை ஆகும். "பிதேஸ் நந்தி" என்னும் வார இதழில் இவருடைய சிறுகதைகள் அதிகம் இடம்பெற்றுள்ளது. சுப்பிரமணிய பாரதி பற்றி எழுதிய லிட்டில் ஸ்பேரோ என்ற புத்தகம்தான் இவர் மொழிபெயர்ததில் சிறந்ததாகக் கருதபடுகிறது. நவீன எழுத்தாளராக தொடங்கி பின்நவீன எழுத்தாளராக மாறினார்.

இவரின் முன்மாதிரிகளின் சிலர்

சிமோன் வில் மற்றும் அனேஸ் நின் இருவர்கள் இருபதாம் நூற்றாண்டில் எழுதிய ஆன்மீகம், இறையியல், மற்றும் தத்துவம் போன்ற படைப்புகளை அடிப்படையாகக் கொண்டு நகுலன் தனது நவீனன்ஸ் டைரீ ஜோடிங்ஸ் என்னும் நாவல் எழுதியுள்ளார். ஜேம்ஸ் ஜாய்சி, டி.எஸ். எலியட் மற்றும் கே. ஐய்யப்பன் பனிகர் போன்றவர்களின் படைப்புகளை மொழிபெயர்த்தும் எழுதியுள்ளார். இவரது படைப்புகள் ஜேம்ஸ் ஜாய்சியை அடிப்படையாக கொண்டிருந்தாலும் டி. எஸ். எலியட்டின் மதநம்பிக்கை மற்றும் மனோதத்துவம் சாமுவேல் பேக்கட் போன்றவர்களின் பாணியிலும் எழுதியுள்ளார்.

இறப்பு

திருவனந்தபுரம் மார் இவனீயோஸ் கல்லூரியில் நாற்பது ஆண்டு காலம் ஆங்கில பேராசிரியராக பணியாற்றி பின்பு ஓய்வு பெற்றார். அதன் பிறகு அவர் தனது வீட்டில் இருந்தே எழுதும் பணியை முழுநேரமாக தொடங்கினார். இவர் திருமணம் செய்துகொள்ளவில்லை. மே 17,2007 இல் திருவனந்தபுரத்தில் தனது 86 வயதில் இயற்கை எய்தினார்.

கவிதைகள்

எனக்கு
யாருமில்லை
நான்
கூட..
வந்தவன் கேட்டான்
என்னைத் தெரியுமா?
தெரியவில்லையே
என்றேன்.
உன்னைத் தெரியுமா?
என்று கேட்டான்.
தெரியவில்லையே
என்றேன்.
பின் என்னதான் தெரியும்
என்றான்.
உன்னையும் என்னையும் தவிர
வேறு எல்லாம் தெரியும்
என்றேன்!

நகுலன் நாவல்கள் மற்றும் அதன் பதிப்பகம்

  • நீலக்கல்(1965)
  • குருஷேத்திரம்(1968)
  • நினைவுப்பாதை(1972)
  • நாய்கள்(1976)
  • நவீன டைரீ(1978)
  • முன்று கவிதைகள்(1979)
  • ஐந்து கவிதைகள்(1981)
  • கோட் ஸ்டான்ட் கவிதைகள்(1981)
  • இவர்கள்(1983)
  • குறுதி(1987)
  • கிராமம்(1991)
  • இரு நீண்ட கவிதைகள்(1991)
  • வாக்குமூலம்(1992)
  • நகுலன் கதைகள்(1998)
  • நகுலன் கவிதைகள்(2001)
  • நகுலன் கட்டுரைகள்(2002)
  • கண்ணாடியாகும் கண்கள்(2006).

வெளி இணைப்புக்கள்

நகுலன் பற்றிய கட்டுரைகள் பரணிடப்பட்டது 2016-03-05 at the வந்தவழி இயந்திரம்

"https://tamilar.wiki/index.php?title=நகுலன்&oldid=4823" இருந்து மீள்விக்கப்பட்டது