தொல்காப்பியம் பொருளதிகாரம் பேராசிரியம்

தொல்காப்பியம் பொருளதிகாரப் பகுதியில் உள்ள 9 இயல்களில் இறுதியில் உள்ள மெய்பாட்டியல், உவமவியல், சேய்யுளியல், மரபியல் ஆகிய நான்கு இயல்களுக்கு மட்டும் பேராசிரியரது உரை உள்ளது. இவர் 13 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்.

நூலின் முதல் பக்கம்

அரிய விளக்கங்கள்

பேராசிரியர் தமது உரையில் அரிய விளக்கங்கள் பலவற்றைத் தந்துள்ளார். அவற்றுள் எடுத்துக்காட்டுக்காகச் சில:

  • பண்ணை - முடியுடை வேந்தரும், குறுநில மன்னரும் முதலாயினோர் நாடக மகளிர் ஆடலும் பாடலும் கண்டும் கேட்டும் காமம் நுகரும் இன்ப விளையாட்டு.[1]
  • மருட்கை என்பது வியப்பு; அற்புதம் எனினும் அமையும்.[2]
  • நிம்பிரி என்பது பொறாமை தொன்றும் குறிப்பு [3]
  • ஆமா என்பது ஆ [4] போல இருக்கும் [5]
  • திறம் என்பது இலக்கணம் [6]
  • ஆனந்த உவமை குற்றம் என அகத்தியனார் குறிப்பிடுகிறார்.[7]
  • தூக்கு என்பது பாக்களைத் துணித்து நிறுத்துதல் [8]
  • யாப்பு என்பது அடிதொறும் பொருள் பெறச் செய்வது.[8]
  • நோக்கு ஒன்பது மாத்திரை முதலாகிய உறுப்புகளைக் கேட்டோர்க்கு நோக்குப்படச் செய்தல்.[8]
  • மரபியலில் இளமை, ஆண், பெண், நான்கு சாதி, புல், மரம், உலகியல், நூல் - ஆகியவற்றின் மரபுகள் குறப்பட்டுள்ளன.[9]

கருவிநூல்

  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதின்மூன்றாம் நூற்றாண்டு, பதிப்பு 2005

அடிக்குறிப்பு

  1. தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் 1 உரை
  2. தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் 3 உரை
  3. தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் 26 உரை
  4. பசு
  5. தொல்காப்பியம் உவமவியல் 1 உரை
  6. தொல்காப்பியம் உவமவியல் 17 உரை
  7. தொல்காப்பியம் உவமவியல் 37 உரை
  8. 8.0 8.1 8.2 தொல்காப்பியம் செய்யுளியல் 1 உரை
  9. தொல்காப்பியம் மரபியல் 1 உரை