தொல்காப்பியப் பொதுப்பாயிர உரை
தொல்காப்பியப் பொதுப்பாயிரமும், அதன் உரையும் 10 ஆம் நூற்றாண்டில் ஆத்திரையன் பேராசிரியன் எனபவரால் செய்யப்பட்டது.
தொல்காப்பியம் கி. மு. 5 ஆம் நூற்றாண்டு நூல். பனம்பாரனார் தொல்காப்பியரின் உடன்சாலை மாணாக்கர். [1] இவர் தொல்காப்பியத்துக்கு எழுதியுள்ளது சிறப்புப் பாயிரம்.
சிறப்புப் பாயிரம் என்பது நூலின் சிறப்பு, நூலாசிரியரது சிறப்பு ஆகியவற்றைக் கூறுவது. பொதுப்பாயிரம் என்பது நூலின் உள்ளடத்தை விளக்கிக் கூறுவது.
தொல்காப்பியத்தின் உள்ளடக்கத்தைக் காட்டும் இந்தப் பொதுப்பாயிரமும், இந்தப் பாயிரத்துக்கான உரையும் கி. பி. 10 ஆம் நூற்றாண்டில் தோன்றின. பேராசிரியர் [2], சிவஞான முனிவர் [3] ஆகியோரது குறிப்புகள் தொல்காப்பியப் பொதுப்பாயிர உரை பற்றிய குறிப்புகளைத் தருகின்றன.
கருவிநூல்
- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பத்தாம் நூற்றாண்டு, பதிப்பு 2005