தீவு (சென்னை)
தீவு அல்லது தீவுத்திடல் சென்னையின் எழும்பூர் பகுதியில் கூவம் ஆறு இரண்டாகப் பிரிந்து வங்காள விரிகுடாவில் கலக்கிறது. கூவம் ஆறு இரண்டாக பிரியும் மேட்டுப் பகுதியை தீவுத் திடல் என்பர். இது ஒர் "ஆற்றுத் தீவு" ஆகும். இத்தீவுத்திடல் 19ஆம் நூற்றாண்டில் செயற்கையாக உருவாக்கப்பட்டது. இத்தீவில் குதிரையேற்றக்காரர் தோமஸ் முன்ரோயின் சிலை ஒன்று உள்ளது.[1]
சென்னை ஜிம்கானா கழகம், பல்லவன் இல்லம் மற்றும் பெருநகரப் போக்குவரத்து நிறுவனத்தின் தலைமையகம் ஆகியன இங்கு உள்ளன. தீவுத் திடல் பரந்த வெற்றிடத்தை இத்தீவில் கொண்டுள்ளது. இங்கு சந்தையும் கண்காட்சிகளும், அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்களும் இடம்பெறுகின்றன.[2]
குறிப்புகள்
- ↑ S. Muthiah (June 4, 2003). "Relics of Company times". The Hindu இம் மூலத்தில் இருந்து ஜூலை 10, 2008 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080710074606/http://www.hinduonnet.com/thehindu/mp/2003/06/04/stories/2003060400180300.htm.
- ↑ "ஜெ., கூட்டத்திற்காக தீவுத்திடல் பொருட்காட்சி அரங்குகள் அகற்றம் : கோடிக்கணக்கில் இழப்பு என புகார்" இம் மூலத்தில் இருந்து 2020-11-27 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20201127173341/https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=208576.
தீவுத் திடல்
Coordinates: 13°04′30″N 80°16′40″E / 13.075026°N 80.277851°E