தி. ப. கைலாசம்
தஞசாவூர் பரமசிவ கைலாசம் (1884–1946), ஓர் கன்னட மொழி எழுத்தாளர். இவரின் சிறந்த படைப்புகளால் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றார். ”நகைச்சுவை நாடகங்களின் மன்னர்”, “கன்னடத்திற்கு ஒரே ஒர் கைலாசம் மட்டும்தான்” என்றெல்லாம் புகழ்ந்து அழைக்கப்படுகிறார்.
வாழ்க்கைக் குறிப்பு
கைலாசம், தென்கருநாடகத்தில் வாழும் தமிழ்க் குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தை பரமசிவ ஐயர் மைசூர் மாகாணத்தின் முதன்மை நீதிபதியாகப் பணியாற்றியவர்.[1] மைசூர அரசரின் ஆலோசனையின்பேரில் புவியியல் கற்க இலண்டன் சென்றார். நேரம் இருக்கும்போது நாடகங்களைப் பார்வையிட்டார்.
மைசூர் திரும்பி அரசுப் பணியில் சேர்ந்தார். பணியாற்ற ஆர்வமின்றி, நாடக எழுத்தாளர் ஆனார். இவரது எழுத்துநடை கன்னடர்களிடையே பெரும்வரவேற்பைப் பெற்றது. 1945 இல் மெட்ராசில் கூடிய கன்னட சாகித்ய சம்மேளனத்திற்குத் தலைமை தாங்கினார்.
மேற்கோள்கள்
- ↑ Rao, L. S. Seshagiri (984). T.P Kailasam. Sahitya Akademi. பக். 1–8.