திலீப்குமார் (எழுத்தாளர்)

திலீப்குமார் (பிறப்பு: 1951, Dilip Kumar) என்பவர் ஒரு தமிழ் எழுத்தாளர், இலக்கிய திறனாய்வாளர், சிறுகதையாசிரியர், மொழிபெயற்பாளர் ஆவார். இவர் குஜராத்தி மொழியினை தாய் மொழியாகக் கொண்டவர். தமிழ் இலக்கியத்தில் பற்று கொண்டவர். சிறுகதை, இலக்கிய திறனாய்வு என இரு துறைகளிலும் எழுதிவருபவர். இவருடைய கதைகள் யதார்த்தின் கனத்தினை வெளிப்படுத்துபவை. தெளிந்த பாத்திரப்படைப்பு, மெல்லிய நகைச்சுவை, அனுபவப்பூர்வமான வாழ்க்கையின் தேடல்கள் கொண்டவை இவருடைய கதைகள்.

2002இல் இந்திய அரசாங்கம் வழங்கும் "பாஷா பாரதி" என்ற மதிப்புமிக்க விருதினைப் பெற்றவர். பல இந்திய இலக்கியத் திட்டங்களுக்கு ஆலோசகராகவும், சிறந்த மொழி பெயர்ப்புக்காக வழங்கப்பெறும் தேசிய விருதுக்கான தேர்வுக் குழுவில் உறுப்பினராகவும் பணிபுரிந்தவர்.

புத்தகங்கள்

சிறுகதைத் தொகுப்பு

  • மூங்கில் குருத்து (1985)
  • கடவு (2000)
  • A Place to Live: Contemporary Tamil Short Fiction (தமிழ் சிறுகதைகளின் ஆங்கில வடிவம்)
  • The Tamil story: Through the Times, Through the Tides (தொகுப்பாசிரியர், பதிப்பாசிரியர் 2016; சாகித்திய அகாதெமியின் மொழிபெயர்ப்புக்கான விருது பெற்ற நூல்)

இலக்கியத் திறனாய்வு

  • மௌனியுடன் கொஞ்ச தூரம் (மௌனி பற்றிய இலக்கியத் திறனாய்வு) (1992)

நாடகங்கள்

  • ரமாவும் உமாவும் (2011)

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்