திரு ஆனைக்காப் புராணம்
திரு ஆனைக்காப் புராணம் (திருவானைக்காப் புராணம்) [1] 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கமலை ஞானப்பிரகாசர் இயற்றிய இரண்டு புராணங்களில் ஒன்று. மற்றொன்று திருமழப்பாடிப் புராணம். [2] [3] இந்த இரண்டு புராணங்களில் மழபாடிப் புராணம் அச்சாகியுள்ளது. ஆனைக்காப் புராணம் அச்சாகவில்லை.
திருவான்மியார் டாக்டர் சாமிநாதையர் நூலகத்தில் தந்திவனப் புராணம் என்னும் பெயரில் சுவடியாக உள்ளது. [4] [5] [6]
திருவானைக்காப் புராணம் 571 பாடல்களைக் கொண்டது. இவை 14 சருக்கங்களாய் அமைந்துள்ளன. மழுவை என்னும் மழபாடிப் புராணம் பாடும்படித் தூண்டிய உலகநாத முனிவரே ஊக்கம் தந்து இதனையும் பாடும்படி செய்தார். இதனை இப் புராணத்தின் இறுதிப் பாடல் குறிப்பிடுகிறது.
- அறம் தரு காலை வாழி, அகிலாண்ட அம்மை வாழி
- நிறைந்திடும் அனைத்தும் கொற்றம் நிலமிசை வாழ்க, பாசம்
- துறந்திடும் உலகநாதன் தொலைவு இல் மெய்ப்புகழே வாழி
- திறந்திடு செம்பு நாதன் திருவடி வாழி வாழி.
இதனை இந்நூலின் பாடல் பாங்கிற்கும் ஓர் எடுத்துக்காட்டாக வைத்துக்கொள்ளலாம்.
அடிக்குறிப்பு
- ↑ மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1977, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, முதல் பாகம். சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014.
- ↑ இருந்தமிழ்ப் புலவர் உய்ய இபவனம் மழுவை என்னும் திருந்து சீர்த் தலப்புராணத் தெள்ளமுது அளித்த செல்வப் பெரும்புகழ்க் கமலை ஞானப் பிரகாசன் – கமலை ஞானப் பிரகாசரின் மாணாக்கர் அளகைச் சம்பந்த முனிவர் பாடல்.
- ↑ ஞானப்பிரகாசர் மான்மியம் என்னும் நூலும் இதனைக் குறிக்கிறது.
- ↑ சுவடி எண் 621
- ↑ தந்தி = யானை, வனம் = கா
- ↑ காகிதப் பிரதி ஒன்றும் உள்ளது.