திருவொற்றியூர் வட்டம்
திருவொற்றியூர் வட்டம், தமிழ்நாட்டின், திருவள்ளூர் மாவட்டத்தின் மாதவரம் வட்டத்தின் பகுதிகளைக் கொண்டு 12 பிப்ரவரி 2014 அன்று புதிதாக நிறுவப்பட்டது.[1]
பின்னர் 4 சனவரி 2018 அன்று திருவொற்றியூர் வட்டம் சென்னை மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது.[2] இதன் நிர்வாகத் தலைமையிட வட்டாட்சியர் அலுவலகம் திருவொற்றியூரில் இயங்குகிறது.
இவ்வட்டத்தின் முக்கியப் பகுதிகள் மணலி, திருவொற்றியூர், கத்திவாக்கம் மற்றும் எண்ணூர் ஆகும்.
குறுவட்டங்களும், வருவாய் கிராமங்களும்
திருவொற்றியூர் வட்டம், திருவொற்றியூர் மற்றும் மணலி என இரண்டு குறுவட்டங்களும், 11 வருவாய் கிராமங்களும் கொண்டது.[3]
இதனையும் காண்க
மேற்கோள்கள்
- ↑ "23 new taluks created in Tamil Nadu". The Times of India. 12 February 2014. http://timesofindia.indiatimes.com/city/chennai/23-new-taluks-created-in-Tamil-Nadu/articleshow/30294878.cms. பார்த்த நாள்: 26 February 2017.
- ↑ "Chennai district doubles in size". 5 January 2018. http://www.thehindu.com/news/cities/chennai/chennai-district-doubles-in-size/article22373082.ece. பார்த்த நாள்: 17 January 2018.
- ↑ சென்ணை மாவட்டத்தின் வருவாய் வட்டங்கள்