திருவொற்றியூர் தியாகேசர் பஞ்சரத்தினம்

திருவொற்றியூர் தியாகேசர் பஞ்சரத்தினம், வடிவுடையம்மை பஞ்சரத்தினம் என்னும் இரண்டு நூல்களும் இரட்டையர் பாடியதாகப் பதிப்பிக்கப்பட்டுள்ளன. பஞ்சரத்தினம் என்பது ஐந்து பாடல்களைக் கொண்ட நூல். திருவொற்றியூர் தியாகேசர்மீது பாடப்பட்ட ஐந்து பாடல்களும். அவ்வூர் வடிவுடையம்மை மீது பாடப்பட்ட ஐந்து பாடல்களும் இவற்றில் உள்ளன. இவற்றில் வடிவுடையம்மை மீது பாடப்பட்ட நூலில் அபிராமி அந்தாதி நூல் பற்றிய குறிப்பு வருகிறது. எனவே இவை இரட்டையரால் பாடப்பட்டவை அல்ல. அபிராமி அந்தாதி நூல் தான்றிய 19 ஆம் நூற்றாண்டு நூல்கள். [1]

அடிக்குறிப்பு

  1. மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1969, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பதினான்காம் நூற்றாண்டு,. சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. பக். 34.