திருவேற்காடு வேதபுரீஸ்வரர் கோயில்
திருவேற்காடு வேதபுரீஸ்வரர் கோயில் சம்பந்தர் பாடல் பெற்ற தொண்டை நாட்டுச் சிவாலயமாகும். நான்கு வேதங்களும் வேல மரங்களாய் நின்று சிவபெருமானை வழிபட்டதால் வேற்காடு எனப்பெயர் பெற்றது. இது திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. அகத்தியருக்கு, இறைவன் திருமணக் கோலம் காட்டியருளிய தலம் என்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). பாடல் பெற்ற தலங்களில் தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றாகும்.[2]
தேவாரம் பாடல் பெற்ற திருவேற்காடு வேதபுரீஸ்வரர் திருக்கோயில் | |
---|---|
பெயர் | |
பெயர்: | திருவேற்காடு வேதபுரீஸ்வரர் திருக்கோயில் |
அமைவிடம் | |
ஊர்: | திருவேற்காடு |
மாவட்டம்: | திருவள்ளூர் |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | இந்தியா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | வேற்காட்டு நாதர், வேதபுரீசுவரர்[1] |
தாயார்: | வேற்கண்ணி, பாலாம்பிகை |
தல விருட்சம்: | வெள் வேல மரம் |
தீர்த்தம்: | வேலாயுதத் தீர்த்தம் (கிணறு) |
பாடல் | |
பாடல் வகை: | தேவாரம் |
பாடியவர்கள்: | திருஞானசம்பந்தர் |
வரலாறு | |
தொன்மை: | புராதனக் கோயில் |
இத்தலத்து சிவபெருமான் மனித உருவில் திருமணக் காட்சி தருகிறார்.
இத்தலத்து அம்பிகையையும், திருவலிதாயம் பாலாம்பிகையையும், திருவொற்றியூர் வடிவுடையாம்பிகையையும், ஒரே நாளில் சென்று வழிபடுவோர், இம்மை மறுமை நலன்களைப் பெறுவர் என்று கூறப்படுகிறது.[1]
இத்தலத்து வேத தீர்த்தத்தில் ஞாயிறு தோறும் நீராடி, இத்தலத்து சிவபெருமானை வழிபட, நோய் நீங்கும் என்பது புராணத்தில் கூறப்பட்டுள்ளது.[1]
வழிபட்டோர்
விநாயகர், திருமால், முருகன், பிரம்மதேவர், இந்திரன், அக்கினி, இயமன், நிருதி, வாயு, வருணன், குபேரன், ஈசானன்.[1]
மூர்க்க நாயனார்
திருவேற்காடு, மூர்க்க நாயனார் அவதாரத் தலம்.
வெளியிணைப்புகள்
திருவேற்காடு வேதபுரீஸ்வரர் கோவில் பற்றிய விபரங்கள் பரணிடப்பட்டது 2008-06-11 at the வந்தவழி இயந்திரம்