திருவேட்களம் பாசுபதேசுவரர் கோயில்
பாசுபதேசுவரர் கோயில் என்பது திருநாவுக்கரசர் திருஞானசம்பந்தர் ஆகியோரால் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 2வது சிவத்தலமாகும்.
தேவாரம் பாடல் பெற்ற திருவேட்களம் பாசுபதேசுவரர் திருக்கோயில் | |
---|---|
புவியியல் ஆள்கூற்று: | 11°23′29″N 79°43′10″E / 11.3913°N 79.7194°E |
பெயர் | |
புராண பெயர்(கள்): | திருவேட்களம், மூங்கில்வனம் |
பெயர்: | திருவேட்களம் பாசுபதேசுவரர் திருக்கோயில் |
அமைவிடம் | |
ஊர்: | திருவேட்களம் |
மாவட்டம்: | கடலூர் |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | இந்தியா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | பாசுபதேசுவரர் பாசுபதநாதர் |
தாயார்: | நல்லநாயகி, சற்குணாம்பாள் |
தல விருட்சம்: | மூங்கில் |
தீர்த்தம்: | நள தீர்த்தம், கிருபா தீர்த்தம் |
சிறப்பு திருவிழாக்கள்: | வைகாசி விசாகம், ஆனி திருமஞ்சனம், விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, தீபாவளி, மகா சிவராத்தரி, பங்குனி உத்திரம் |
பாடல் | |
பாடல் வகை: | தேவாரம் |
பாடியவர்கள்: | திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், அருணகிரி நாதர் |
வரலாறு | |
தொன்மை: | 1000-2000 வருடங்களுக்கு முன் |
அமைத்தவர்: | சோழர்கள் |
அமைவிடம்
இத்தலம் தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டத்திலுள்ள திருவேட்களம் எனும் ஊரில் அமைந்துள்ளது. தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத் தலங்களில் இது 2வது சிவத்தலமாகும்.
இறைவன்,இறைவி
இத்தலத்தின் மூலவர் பாசுபதேஸ்வரர், தாயார் நல்லநாயகி (சமஸ்கிருதம்:சத்குணாம்பாள்). இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இத்தலத்தின் தலவிருட்சமாக மூங்கில் மரமும், தீர்த்தமாக கிருபா தீர்த்தமும் அமைந்துள்ளது.
சிறப்புகள்
சம்பந்தர் இங்கிருந்து சிதம்பரத்தைத் தரிசித்தார் எனப்படுகிறது. அர்ச்சுனனுக்கு பாசுபதம் தந்தருளிய தலம் என்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்)[1]. நடராசர் முருகனாகவும் முருகன் நடராசராகவும் தோன்றிய தலமாகக் கூறுவார்கள்[2].