திருவேங்கட உலா

திருவேங்கட உலா [1] என்னும் உலா நூல் 16 ஆம் நூற்றாண்டில் தோன்றியது. உலா நூல்கள் எனத் தனியாகப் போற்றப்படும் நூல்களில் திருமாலைப் பற்றிய உலா நூல்கள் மூன்று உள்ளன. திருக்குறுங்குடி அழகிய நம்பி உலா, சிறுபுலியூர் உலா ஆகிய இரண்டும் 17 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டவை. இவற்றின் ஆசிரியர் பெயர் தெரியவில்லை. மற்றொன்று திருவேங்கட உலா. இது மற்றைய இரண்டினுக்குக் காலத்தால் முந்தியது.

அடிக்குறிப்பு

  1. மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1976, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, மூன்றாம் பாகம். சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. பக். 218. 
"https://tamilar.wiki/index.php?title=திருவேங்கட_உலா&oldid=16721" இருந்து மீள்விக்கப்பட்டது