திருவலிதாயம் திருவல்லீசுவரர் கோயில்

திருவலிதாயம் - பாடி - திருவல்லீசுவரர் திருக்கோயில் [1] என்பது சம்பந்தர் பாடல் பெற்ற ஒரு சிவன் கோயில் ஆகும். பாடல் பெற்ற தலங்களில் தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றாகும்.[2]

தேவாரம் பாடல் பெற்ற
திருவலிதாயம் திருவல்லீசுவரர் திருக்கோயில்
திருவலிதாயம் திருவல்லீசுவரர் திருக்கோயில் is located in தமிழ் நாடு
திருவலிதாயம் திருவல்லீசுவரர் திருக்கோயில்
திருவலிதாயம் திருவல்லீசுவரர் திருக்கோயில்
திருவல்லீசுவரர் கோயில், திருவலிதாயம் (பாடி)
புவியியல் ஆள்கூற்று:13°05′50″N 80°11′14″E / 13.097360°N 80.187110°E / 13.097360; 80.187110
பெயர்
புராண பெயர்(கள்):திருவலிதாயம்
பெயர்:திருவலிதாயம் திருவல்லீசுவரர் திருக்கோயில்
அமைவிடம்
ஊர்:திருவலிதாயம் (பாடி)
மாவட்டம்:சென்னை
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:திருவல்லீஸ்வரர், திருவலிதமுடையநாயனார்
தாயார்:ஜெகதாம்பிகை
உற்சவர் தாயார்:பரத்வாஜ் தீர்த்தம்
தல விருட்சம்:பாதிரி, கொன்றை
ஆகமம்:காமீகம்
சிறப்பு திருவிழாக்கள்:சித்திரையில் பிரம்மோற்ஸவம், தை கிருத்திகை, குரு பெயர்ச்சி.
பாடல்
பாடல் வகை:தேவாரம்
பாடியவர்கள்:திருஞானசம்பந்தர்

அமைவிடம்

சென்னை மாவட்டத்தில் ஆவடி செல்லும் சாலையில் பாடி லூகாஸ் டிவிஸ் பேருந்து நிறுத்தத்திற்கு அருகில் உள்ள படவட்டம்மன் கோவிலுக்கு எதிரே உள்ள சாலை வழியாகச் சென்று இக்கோவிலை அடையலாம்.

சிறப்பு

இராமர், ஆஞ்சனேயர், சூரியன், சந்திரன் முதலானோர் இறைவனை வழிபட்ட தலம் என்பது தொன்நம்பிக்கை. இத்தலத்தின் மூலவர் திருவல்லீஸ்வரர் என்றும் திருவலிதமுடையநாயனார் என்றும் அழைக்கப்பெறுகிறார். தாயார் ஜெகதாம்பிகை ஆவார். பரத்வாஜ் தீர்த்தம் இத்தல தீர்த்தமாகவும், பாதிரி மற்றும் கொன்றை மரம் தலமரமாகவும் அறியப்பெறுகிறது.

மேற்கோள்கள்

  1. வல்லீஸ்வரசுவாமி கோயில் பரணிடப்பட்டது 2008-06-11 at the வந்தவழி இயந்திரம்
  2. பு.மா.ஜெயசெந்தில்நாதன், திருமுறைத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009

இவற்றையும் பார்க்க

உசாத்துணை

அருள்மிகு திருவல்லீஸ்வரர் திருக்கோயில் - தினமலர் கோவில்கள்