திருவண்ணாமலையார் வண்ணம்
திருவண்ணாமலையார் வண்ணம் என்னும் நூல் கவிராச பிள்ளை என்பவரால் 16 ஆம் நூற்றாண்டு எழுதப்பட்டது. இது வண்ணம் (பாநடை வகை) சந்த நடையில் அமைந்த வண்ண நூல்களின் முன்னோடி. திருவண்ணாமலை ஊரிலுள்ள இறைவன் மீது பாடப்பட்டது. [1]
பாடல்
இந்த நூலில் வரும் வண்ணப்பாடலின் ஒரு பகுதி (எடுத்துக்காட்டு)
(சந்தம் காட்டும் வகையில் பாடல் பிரிப்பு செய்யப்பட்டுள்ளது)
- மலர்த்தானை வனசமலர் தனைப்போல எழுதிடினும்
- மலர்ப்பாய வனமென நடந்து வருமோ
உறுப்பான திலகநுதல் இதுப்போல எழுதிடினும்
- உவப்பான குறுவியர் விரும்பி வருமோ
- மணிக்கோல மிடறுகமு கினைப்போல எழுதிடினும்
- மரப்பாவை உருகுமிசை இன்பம் வருமோ
- விரப்பெழுத் தின்வீணை பேச வருமோ
- மரப்பாவை உருகுமிசை இன்பம் வருமோ
அடிக்குறிப்பு
- ↑ மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, மூன்றாம் பாகம், பதிப்பு 2005