திருவகுப்பு
திருவகுப்பு என்னும் நூல் அருணகிரிநாதரால் பாடப்பட்டது.
இது சந்தப்பாக்களால் ஆன நூல்.
காலம் 15ஆம் நூற்றாண்டு.
இந்த நூலில் 25 வகுப்புகள் உள்ளன.
முருகன் அருளின் சிறப்பு, அடியார் பெருமை முதலானவற்றை வகுத்துக் கூறும் ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு வகுப்பு.
முதல் 18 வகுப்புகள் மட்டுமே அருணகிரிநாதரால் பாடப்பட்டவை, பிற பிற்சேர்க்கை என்பது ஆறுமுகநாவலர் கருத்து.
கருவிநூல்
- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினைந்தாம் நூற்றாண்டு, 2005