திருமோகூர் காளமேகப் பெருமாள் கோயில்
திருமோகூர் காளமேகப் பெருமாள் கோயில் 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். மதுரைக்கு வடக்கே 12 கி.மீ. தொலைவில் யா.ஒத்தக்கடை அருகே, திருமோகூர் ஊராட்சியில் அமைந்துள்ளது.[1]
| |
பிறபெயர்கள்: | திருமோகூர் |
---|---|
மூலவர்: | காளமேகப் பெருமாள் |
தாயார்: | மோஹனவல்லித் தாயார் |
உத்சவர்: | திருமோகூர் ஆப்தன் |
உத்சவ தாயார்: | மோகனவல்லித் தாயார் |
புஷ்கரணி: | சீராப்தி புஷ்கரணி |
விமானம்: | சதுர்முக விமானம் |
அமைவிடம்: | மதுரை |
மாநிலம்: | தமிழ்நாடு, இந்தியா |
புவியியல் ஆள்கூறுகள்: | 9.950982°N, 78.207105°E |
கோயில் கலைச் சிறப்புகள்
இக்கோயிலிலுள்ள பல மண்டபங்கள் சிவகங்கையை ஆட்சிபுரிந்த மருது பாண்டியர் திருப்பணியாகும். மூலவர் காளமேகப் பெருமாளின் சந்நிதி உயரமான அதிட்டானத்தின்மீது அமைக்கப்பட்டுள்ள கட்டுமான கற்கோவிலாகும். தாயார் மோகனவல்லி எனப்படுகிறார்.
இக்கோவிலின் கம்பத்தடி மண்டபத்திலுள்ள இராமர், சீதை, லக்ஷ்மணர், ஆஞ்சநேயர், மன்மதன், ரதி ஆகியோரின் உருவங்களைக் கொண்ட ஒற்றைக் கல்லினாலான சிற்பங்கள் சிறந்த கலைச் செல்வங்களாகும். யாளிகளின் உருவங்களைத் தாங்கிய தூண்கள் அரிய சிற்ப வேலைப்பாடுகள் மிக்கது. இம்மண்டபத்தில், சந்நிதியை நோக்கியவாறு, மருது பாண்டியர் ஆளுயரக் கற்றூண் உருவங்கள் காணப்படுகின்றன.
சங்ககாலத்தில் மோகூர்
சங்ககாலத்தில் மோகூர் அரசன் பழையன். இவன் தம்பி இளம் பழையன் மாறன். செங்குட்டுவன் இவனைப் போரில் வீழ்த்தி, இவனது காவல்மரம் வேம்பை வெட்டித் தன் தலைநகர் வஞ்சிக்குக் கொண்டுசென்று, தனக்கு முரசு செய்துகொண்டான். நான்மொழிக் கோசர் இவ்வூரில் வரி தண்டினர். மோகூர் வரி தர மறுத்ததால், கோசருக்கு உதவும் பொருட்டு மோரியர் படையெடுத்து வந்தனர்.
ஆங்கிலேயர் காலத்தில் மோகூர்
1763 ஆண்டில், கர்நாடகப் போர் நடைப்பெற்ற காலத்தில், ஆங்கிலேயர் படையெடுப்பின் போது, ஆங்கிலேய கர்னல் ஹீரான் என்பவன் இக்கோயிலிலுள்ள இறைவன் திருமேனி, பொன் மற்றும் பொருட்களைக் கொள்ளையடித்தான். இவற்றை ஒட்டகத்தில் ஏற்றி திருச்சி சென்றுகொண்டிருந்த போது, இவனுடன் கள்ளர் மரபினர் போர் செய்து, ஆங்கிலேய படையை வென்று, எல்லாவற்றையும் மீட்டு வந்தனர். இதில் பல ஆங்கிலேய சிப்பாய்கள் கொல்லப்பட்டார்கள்.[2][3][4][5]
இதனை நினைவூட்டும் வகையில் இறைவன் கள்ளர் திருக்கோலத்தில் பவனி வருகின்றார். மேலும், இதற்காக, கோயிலின் தேர் இழுக்கும் உரிமை கள்ளர் மரபினரின் திருமோகூர், பூலாம்பட்டி, கொடிக்குளம், சிட்டம்பட்டி, வௌவால் தோட்டம், ஆளில்லாங்கரை கிராமத்தார்களுக்கு வழங்கப்பட்டது.[2][6]
நம்மாழ்வார் பாசுரம்
- நம்மாழ்வார் இவ்வூர் கோயில்மீது 10 பாசுரங்கள் பாடியுள்ளார்.[7]
போக்குவரத்து
இந்த கோயிலுக்கு மதுரையில் இருந்து நகர பேருந்து வசதி உள்ளது.
படத்தொகுப்பு
- Thirumohoor Kalamegaperumal temple1.jpg
ராஜகோபுரம்
- Thirumohoor Kalamegaperumal temple3.jpg
கொடி மரம்
- Thirumohoor Kalamegaperumal temple4.jpg
முன் மண்டபம்
- Thirumohoor Kalamegaperumal temple2.jpg
விமானம்
அடிக்குறிப்பு
- ↑ திருமோகூர் காளமேகப் பெருமாள் கோயில்
- ↑ 2.0 2.1 திருமோகூர் தலவரலாறு. p. 18.
- ↑ "பாண்டிநாட்டுத் திருப்பதிகள்".
- ↑ "ஆலவாய்".
- ↑ "Maruthu Pandiyars".
- ↑ "கஜேந்திர மோட்ச திருவிழா". தினமணி. 20-02-2019.
{{cite web}}
: Check date values in:|date=
(help)[தொடர்பிழந்த இணைப்பு] - ↑ பாடல் 3074 முதல் 3084, 11 ஆம் பாடல் பயன் கூறும் பாடல், நாலாயிர திவ்வியப் பிரபந்தம், திருவேங்கடத்தான் திருமன்றம் டிரஸ்ட் வெளியீடு, 2009
- ↑ பாசுரம் 3074
- ↑ பிற பாடல்கள்