திருமாளிகைத்தேவர் திருவிசைப்பா

திருமாளிகைத்தேவர் திருவிசைப்பா [1] தொகுப்பில் உள்ள பாடல்கள் 10 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த திருமாளிகைத் தேவரால் பாடப்பட்டது. பன்னிரு திருமுறைகளில் ஒன்பதாம் திருமுறையாகத் தொகுக்கப்பட்டுள்ளது திருவிசைப்பா.. இதில் ஒன்பது பேர் பாடிய பாடல்கள் உள்ளன. இத் தொகுப்பில் முதல் இடம் பெற்றுள்ள பாடல்கள் திருமாளிகைத் தேவரின் திருவிசைப் பாக்கள். இவரது 45 பாடல்கள் இதில் இடம்பெற்றுள்ளன.

பாடல் - எடுத்துக்காட்டு [2]

ஒளி வளர் விளக்கே உவப்பு இலா ஒன்றே உணர்வு சூழ் கடந்ததோர் உணர்வே
தெளி வளர் பளிங்கின் திரள் மணிக் குன்றே சித்தத்துள் தித்திக்கும் தேனே
அளி வளர் உள்ளத்(து) ஆனந்தக் கனியே அம்பலம் ஆடு அரங்காக
வெளி வளர் தெய்வக் கூத்து உகந்தாயைத் தொண்டனேன் விளம்புமா விளம்பே.

அடிக்குறிப்பு

  1. மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1972, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பத்தாம் நூற்றாண்டு,. சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. 
  2. பொருள் நோக்கில் சொற்பிரிப்பு செய்யப்பட்டது