திருமலை தென்குமரி
திருமலை தென்குமரி 1970 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். ஏ. பி. நாகராஜன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சீர்காழி கோவிந்தராஜன், மனோரமா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
திருமலை தென்குமரி | |
---|---|
இயக்கம் | ஏ. பி. நாகராஜன் |
தயாரிப்பு | சி. பரமசிவம் ஸ்ரீ விஜயலக்ஸ்மி பிக்சர்ஸ் |
இசை | குன்னக்குடி வைத்தியநாதன் |
நடிப்பு | சீர்காழி கோவிந்தராஜன் மனோரமா |
வெளியீடு | ஆகத்து 15, 1970 |
ஓட்டம் | . |
நீளம் | 4140 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
விஜயலட்சுமி பிச்சர்ஸ் இதனை தயாரித்தனர்.
கதை
இருபது குடும்பங்கள் சென்னையிலிருந்து திருப்பதி முதல் தென்குமரி வரை ஆன்மீக யாத்திரையாக செல்கின்றனர். அவர்கள் ஒவ்வொரு குடும்பத்தினரின் மனநிலை, அவர்களின் பிரட்சனைகள், பயணத்தின் நடுவில் அவர்கள் சந்திக்கும் பிரட்சனைகள், அதிலிருந்து அவர்களின் அனுபவங்கள் என கதை செல்கிறது.
திரைப்படத்தில்.. திருப்பதி ஏழுமலையான் கோயில் திருத்தணி முருகன் கோயில் மைசூர் அம்மன் கோயில் மதுரை மீனாட்சியம்மன் கோயில் குருவாயூர் குருவாயூரப்பன் கோயில் தென்குமரி குமரியம்மன் கோயில் ஆகிய கோயில்கள் காட்டப்படுகின்றன.
நடிகர்கள்
- சீர்காழி கோவிந்தராஜன்
- சிவகுமார்
- கே. டி. சந்தானம்
- சுருளிராஜன்
- வி. கோபாலகிருஷ்ணன்
- டி.என். சிவதாணு
- வீரசாமி
- சந்திரன்பாபு
- டைப்பிஸ்ட் கோபு
- சசிகுமார்
- ரமேஷ்
- ராமமூர்த்தி
- எஸ். ஆர். தசரதன்
- எஸ். வி. ராஜகோபால்
- ஜெகதீஸ்
- கோவை பாலு
- காந்திபாகவதர்
- ருத்ராபதி
- காளை
- கருப்பையன்
- சுந்தர்
- கிருஷ்ணமூர்த்தி
- சீதாராமன்
- ஜோதிசண்முகம்
- மனோரமா
- குமாரி பத்மினி
- ரமாபிரபா
- சகுந்தலா
- சைலசிறி
- நளினா
- காந்திமதி
- வசந்தா
- உசா
- சீதாலட்சுமி
- நிர்மலா
- பார்வதி
- லட்சுமி
- பார்வதி
- இந்திரா
- ரேணுகா
- பட்டம்மாள்
- நவகுமாரி
- லதா
- விஜயசிறீ
- மாஸ்டர் பிரபாகரன்
- மாஸ்டர் தசரதன்
- மாஸ்டர் அருண்குமார்
- மாஸ்டர் சீனிவாசன்
- மாஸ்டர் சுரேந்திரகுமார்
- பேபி சுமதி
- பேபி வளர்மதி
- பேபி ராதா
படக்குழு
- மேக்கப் - தட்சிணாமூர்த்தி, சேதுபதி, சந்திரன், கதிர்வேலு, சொக்கலிங்கம், ராஜேந்திரன், ரங்கனாதன்
- ஆடை அலங்காரம் = வெங்கட்ராவ், உதவி - எம். ராமன், பி. தருமன், ஈ. ஏழுமலை
- ஒலிப்பதிவு = சி. பி. கன்னியப்பன்
- ஒலிப்பதிவு உதவி - சி. பி. கோபால், என். வேணு, பி. எஸ். ரகு, ராஜூ, அப்துல்லா
- நடனம் - பி. எஸ். கோபாலகிருஷ்ணன்
- கதகளி நடனம்- லட்சுமி நாராயணன், சரோஜா
- பின்னணி பாடகர்கள்- சீர்காழி கோவிந்தராஜன், ஏ. எல். ராகவன், தாராபுரம் சுந்தரராஜன், எல். ஆர். ஈஸ்வரி, மனோரமா, சரளா, அஞ்சலி, எம். ஆர். விஜயா, மாதுரி
- பாடல்கள் - பூவை செங்குட்டுவன், உளுந்தூர்பேட்டை சண்முகம், நெல்லை அருள்மணி, தென்காசி பாரதிசாமி, சைலசிறீ (கன்னடம்), ராம்சிறீ (தெலுங்கு), ஜோப் (மலையாளம்)
- இசை - குன்னக்குடி வைத்தியனாதன்
- இசை உதவி - எம். முத்து, சேது, ராகவன்
- கலை இயக்குனர் - கங்கா, உதவி - ஜி. தியாகராஜ்
- படத்தொகுப்பு - டி. விஜயரங்கம்
- படத்தொகுப்பு உதவி - டி. கருணாநிதி, ஆர். ஜி. பாண்டுரங்கன்
- ஒளிப்பதிவு - டபள்யூ. ஆர். சுப்பாராவ்
- ஒளிப்பதிவு உதவி - தேவுரு, எஸ். வி. பத்மனாபன், ராஜகோபால்
- உதவி இயக்குனர்கள் - எஸ். ஆர். தசரதன், எம். கருப்பையன், தஞ்சை மதி
- கதை, வசனம், இயக்கம் - ஏ. பி. நாகராஜன்
பாடல்கள்
இத்திரைப்படத்திற்கு குன்னக்குடி விஸ்வநாதன் இசையமைத்திருந்தார். [1]
# | பாடல் | பாடகர்(கள்) | நீளம் | |
---|---|---|---|---|
1. | "அழகே தமிழே நீ" | சீர்காழி கோவிந்தராஜன், சரளா, எம். ஆர். விஜயா, மனோரமா, தாரபுரம் சுந்தரராஜன், எல். ஆர். அஞ்சலி, ஏ. எல். ராகவன் | 6:15 | |
2. | "குருவாயுரப்பா" | சீர்காழி கோவிந்தராஜன் | 3:34 | |
3. | "கழியாத காவியம்" | சீர்காழி கோவிந்தராஜன் | 2:55 | |
4. | "மதுரை அரசாலும்" | சீர்காழி கோவிந்தராஜன், எல். ஆர். ஈஸ்வரி, எம். ஆர். விஜயா | 5:49 | |
5. | "சிந்தனையில் மேடைக்கட்டி" | சீர்காழி கோவிந்தராஜன், சரளா | 3:16 | |
6. | "திரல்மணி கதிர்கள், நீளக்கடா" | சீர்காழி கோவிந்தராஜன், எல். ஆர். ஈஸ்வரி | 4:09 | |
7. | "திருப்பதி மலைவாழும்" | சீர்காழி கோவிந்தராஜன் | 3:20 |
விருதுகள்
திருமலை தென்குமரி 1970 ஆகத்து 15 அன்று வெளியிடப்பட்டது.[2] இத்திரைப்படம் பெரும் வெற்றி பெற்றது. உடன் தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகளில் மூன்று பிரிவுகளில் வென்றது.
- சிறந்த இசை இயக்குனர் (குன்னகுடி மருத்துவநாதன்)
- சிறந்த ஆண் பின்னணி பாடகர் (சிர்காஷி கோவிந்தராஜன்)
- சிறப்பு பரிசு.
மேற்கோள்கள்
- ↑ "Thirumalai Thenkumari". 1970 இம் மூலத்தில் இருந்து 17 April 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180417063957/https://www.saavn.com/s/album/tamil/Thirumalai-Thenkumari-1970/gzDSQ-3SzfQ_.
- ↑ "திருமலை தென்குமரி" (in ta) இம் மூலத்தில் இருந்து 17 April 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180417063958/http://vellitthirai.com/movie/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF/.