திருமணம் (திரைப்படம்)
திருமணம் , 1958 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். வலம்புரி பிக்சர்ஸ் நிறுவனத்தினரின் தயாரிப்பில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், நாகைய்யா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]
திருமணம் | |
---|---|
தயாரிப்பு | ஏ. பீம்சிங் வலம்புரி பிக்சர்ஸ் |
இசை | எஸ். எம். சுப்பைய்யா நாயுடு டி. ஜி. லிங்கப்பா |
நடிப்பு | ஜெமினி கணேசன் நாகைய்யா எஸ். வி. இரங்காராவ் அசோகன் விஸ்வநாதன் சாவித்திரி எம். என். இராஜம் குமாரி கமலா பி. சரோஜா தேவி சந்தியா |
வெளியீடு | சூலை 18, 1958 |
ஓட்டம் | . |
நீளம் | 16771 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பாடல்கள்
எஸ். எம். சுப்பையா நாயுடு, டி. ஜி. லிங்கப்பா ஆகியோர் திரைப்படத்துக்கு இசையமைத்தார்கள். பாடல்களை தஞ்சை ராமையாதாஸ், கண்ணதாசன், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், சுரதா, எம். கே. ஆத்மநாதன், சுப்பு ஆறுமுகம் ஆகியோர் யாத்தனர். பாரதியாரின் பாடலொன்றும், வள்ளலாரின் திருவருட்பா ஒன்றும் இத்திரைப்படத்தில் இடம்பெற்றன.எம். எம். தண்டபாணி தேசிகர், டி. எம். சௌந்தரராஜன், ஏ. எம். ராஜா, சீர்காழி கோவிந்தராஜன், ஏ. எல். ராகவன், ஜிக்கி, பி. லீலா, பி. சுசீலா, ஏ. ஜி. ரத்னமாலா, ஏ. பி. கோமளா ஆகியோர் பின்னணி பாடினார்கள்.[2]
எண் | பாடல் | பாடியவர்/கள் | பாடலாசிரியர் | கால அளவு |
---|---|---|---|---|
1 | மங்கியதோர் நிலவினிலே | டி. எம். சௌந்தரராஜன் | பாரதியார் | 03:19 |
2 | 'ஆடிய பாதம் மன்றாடிய பாதம் | எம். எம். தண்டபாணி தேசிகர் | வள்ளலார் | 03:10 |
3 | தங்க நிலவில் | ஏ. எம். ராஜா & ஜிக்கி | கண்ணதாசன் | 03:11 |
4 | திருமண நாளும் பார்த்தாச்சு | ஜிக்கி & ஏ. பி. கோமளா | ||
5 | இன்பம் யாவுமே | டி. எம். சௌந்தரராஜன் | தஞ்சை ராமையாதாஸ் | 03:16 |
9 | லவா லவா ... வை ராஜா வை | சீர்காழி கோவிந்தராஜன் & ஏ. ஜி. ரத்னமாலா | ||
6 | வா ஒரு சேதி சொல்லவே ஓடி வா | சீர்காழி கோவிந்தராஜன் &பி. லீலா | ||
7 | கழனி எங்கும் சதிராடும் | ஏ. எல். ராகவன் & ஜிக்கி | பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் | 03:05 |
8 | துள்ளி வரப்போறேன் | சீர்காழி கோவிந்தராஜன் & பி. சுசீலா | ||
9 | எண்ணமெல்லாம் ஓர் இடத்தையே | டி. எம். சௌந்தரராஜன் | சுரதா | 02:43 |
10 | என் எண்ணம் இனிப்பதேனோ | ஜிக்கி | எம். கே. ஆத்மநாதன் | 03:10 |
11 | கருணைக் கடலே கற்பக தருவே | எம். எம். தண்டபாணி தேசிகர் | சுப்பு ஆறுமுகம் |
மேற்கோள்கள்
- ↑ சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 23 அக்டோபர் 2004 இம் மூலத்தில் இருந்து 2017-01-20 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20170120093721/http://www.lakshmansruthi.com/cineprofiles/1958-cinedetails16.asp. பார்த்த நாள்: 2022-05-08.
- ↑ கோ. நீலமேகம். திரைக்களஞ்சியம் தொகுதி - 1. மணிவாசகர் பதிப்பகம், சென்னை 108 (☎:044 25361039). முதல் பதிப்பு டிசம்பர் 2014. பக். 145.