திருப்பூர் ஊராட்சி ஒன்றியம்
திருப்பூர் ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பதின்மூன்று ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். திருப்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் 13 கிராம ஊராட்சிகள் உள்ளது.[1] இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் திருப்பூர் நகரத்தில் இயங்குகிறது.
மக்கள் வகைப்பாடு
2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, திருப்பூர் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 90,774 ஆகும். அதில் பட்டியல் இன மக்களின் தொகை 15,516 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 197 ஆக உள்ளது. [2]