திருப்பனந்தாள் ஊராட்சி ஒன்றியம்
திருப்பனந்தாள் ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பதினான்கு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] திருப்பனந்தாள் ஊராட்சி ஒன்றியம் நாற்பத்து நான்கு ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. திருவிடைமருதூர் வட்டத்தில் அமைந்த திருப்பனந்தாள் ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் திருப்பனந்தாளில் இயங்குகிறது.
மக்கள் வகைப்பாடு
2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, திருப்பனந்தாள் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,04,663 ஆகும். அதில் பட்டியல் இன மக்களின் தொகை 42,267 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 278 ஆக உள்ளது.[2]
ஊராட்சி மன்றங்கள்
திருப்பனந்தாள் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள நாற்பத்து நான்கு ஊராட்சி மன்றங்களின் விவரம்;[3]
- அணைக்கரை
- அத்திப்பாக்கம்
- ஆரலூர்
- இருமூலை
- உக்கரை
- கஞ்சனூர்
- கதிராமங்கலம்
- கருப்பூர்
- கன்னாரக்குடி
- காட்டநகரம்
- காவனூர்
- கீழசூரியமூலை
- கீழ்மந்தூர்
- குலசேகரநல்லூர்
- குறிச்சி
- கூத்தனூர்
- கொண்டசமுத்திரம்
- கோட்டூர்
- கோயில்ராமபுரம்
- சரபோஜிராஜபுரம்
- சிக்கல்நாயக்கன்பேட்டை
- சிதம்பரநாதபுரம்
- செருகுடி
- திட்டச்சேரி
- திருகோடிக்காவல்
- திருமங்கைச்சேரி
- திருமாந்துரை
- திருலோகி
- திருவள்ளியங்குடி
- துகிலி
- நரிக்குடி
- நெய்குப்பை
- நெய்வாசல்
- பந்தநல்லூர்
- மகாராஜபுரம்
- மணலூர்
- மணிக்குடி
- மரத்துறை
- முள்ளங்குடி
- முள்ளுக்குடி
- மேலக்காட்டுர்
- மேலசூரியமூலை
- வீராக்கான்
- வேலூர்