திருக்குறுந்தாண்டகம்
திருக்குறுந்தாண்டகம் (Tirukkuruntantakam) என்பது வைணவ சமயத்தின் பனிரெண்டு கவிஞர்களில் ஒருவரான திருமங்கையாழ்வாரருளிய நூலாகும்.[1][2][3] இது தாண்டகம் என்ற செய்யுள் வகையைச்சார்ந்து இயற்றப்பட்டதாகும்.
பெயர்க்காரணம்
பாடலின் ஒவ்வொரு அடியும் இடையிலே தாண்டுவதை இந்தப் பாடல்களில் காணலாம். பாடலின் அகத்தே தாண்டுவது தாண்டகம். ஒவ்வொரு அடியிலும் ஆறு சீர்கள் வந்தால் அது குறுந்தாண்டகம் என்றுரைப்பர்.[4][5] திருக்குறுந்தாண்டகம் என்பது வைணவக்கடவுளைப் பற்றிய செய்யுளாதலால் 'திரு' என்று பெயர் தொடங்குகிறது[6].
நாலாயிரத்திவ்யபிரபந்தத்திரட்டில் பங்கு
இது நாலாயிரத்திவ்யப் பிரபந்தத்தில் 2032 முதல் 2051 வரையிலான பாடல்கள் இரண்டாவது ஆயிரத்தில் இடம்பெற்றுள்ளன. இதில் 20 பாடல்கள் உண்டு[7].[8]
திருக்குறுந்தாண்டகம் முதற்செய்யுள்
- நிதியினைப் பவளத் தூணை
- நெறிமையால் சினைய வல்லார்
- கதியினைக் கஞ்சன் மாளக்
- கண்டுமுன் அண்டம் ஆளும்
- மதியினை மாலை வாழ்த்தி
- வணங்கிஎன் மனத்து வந்த
- விதியினைக் கண்டு கொண்ட
- தொண்டனேன் விடுகி லேனே. [9]
உசாத்துணை
- ↑ Dalal, Roshen (2010) (in en). Hinduism: An Alphabetical Guide. Penguin Books India. பக். 417. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-14-341421-6. https://books.google.com/books?id=DH0vmD8ghdMC&newbks=0&printsec=frontcover&pg=PA417&dq=Tirukkuruntantakam+tamil&hl=en.
- ↑ (in en) Literary Heritage of the Tamils. International Institute of Tamil Studies. 1981. பக். 230. https://books.google.com/books?id=pXYOAAAAYAAJ&newbks=0&printsec=frontcover&dq=Tirukkuruntantakam&q=Tirukkuruntantakam&hl=en.
- ↑ RAMANUJAN, S. R. (2014-08-13) (in en). THE LORD OF VENGADAM. PartridgeIndia. பக். 95. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-4828-3462-8. https://books.google.com/books?id=rntPBAAAQBAJ&newbks=0&printsec=frontcover&pg=PA95&dq=periya+thirumadal&hl=en.
- ↑ Zvelebil, Kamil (1974) (in en). Tamil Literature. Otto Harrassowitz Verlag. பக். 101. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-3-447-01582-0. https://books.google.com/books?id=OQ33i496MsIC&newbks=0&printsec=frontcover&pg=PA101&dq=T%C4%81%E1%B9%87%E1%B9%ADakam&hl=en.
- ↑ Peterson, Indira Viswanathan (2014-07-14) (in en). Poems to Siva: The Hymns of the Tamil Saints. Princeton University Press. பக். 80. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-4008-6006-7. https://books.google.com/books?id=kQwABAAAQBAJ&newbks=0&printsec=frontcover&pg=PA80&dq=tantakam+verse&hl=en.
- ↑ http://www.rmrl.in:8000/cgi-bin/koha/opac-detail.pl?biblionumber=44857[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ http://saranagathi.org/blogs/books/thirukurunthandakam/
- ↑ Cutler, Norman (1987-05-22) (in en). Songs of Experience: The Poetics of Tamil Devotion. Indiana University Press. பக். 3. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-253-11419-8. https://books.google.co.in/books?id=veSItWingx8C&newbks=0&printsec=frontcover&pg=PA3&dq=Periya+Tirumatal&hl=en&redir_esc=y#v=snippet&q=Periya%20Tirumatal&f=false.
- ↑ திருமங்கையாழ்வார் திருக்குறுந்தாண்டகம் 1