திரிஷா கிருஷ்ணன்
திரிஷா கிருஷ்ணன் இயற்பெயர் அனுராதிகா கிருஷ்ணரத்னம் (பிறப்பு - மே 4, 1983, சென்னை) தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்பட முன்னணி கதாநாயகி ஆவார். இவர் நடித்த சாமி, கில்லி போன்ற திரைப்படங்கள் குறிப்பிடதக்கவை. இவர் திரைக்கு வருவதற்கு முன்பு ஆரம்பகாலத்தில் சென்னை அழகியாக 1999ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
திரிஷா கிருஷ்ணன் | |
---|---|
திரிசா கிருஷ்ணன் | |
இயற் பெயர் | அனுராதிகா[1] |
பிறப்பு | மே 4, 1983 சென்னை , தமிழ் நாடு |
வேறு பெயர் | திரிஷா கிருஷ்ணன், அனுராதிகா |
நடிப்புக் காலம் | 1999 - தற்போது வரை |
பெற்றோர் | தந்தை : கிருஷ்ணரத்னம் ஐயர் (கிருஷ்ணன்) தாயார் : உமாபாரதி (உமா) |
குறிப்பிடத்தக்க படங்கள் | சாமி (2003) வர்ஷம் (2004) கில்லி (2004) அத்தடு (2005) நுவ்வொஸ்தானண்டே நேனொத்தண்டானா (2005) உனக்கும் எனக்கும் (2006) ஆடவாரி மாடலகு அர்தாலே வேறுலே (2007) கிரீடம் (2007) குருவி (2008) மங்காத்தா (2011) |
இணையத்தளம் | www.trisha-krishnan.com |
வாழ்க்கை குறிப்பு
- இவரது இயற்பெயர் அனுராதிகா மேலும் இவர் திரையுலகிற்கு வருவதற்கு முன்பே மாடலிங் மற்றும் விளம்பர படங்களில் நடிக்கும் போதே "திரிஷா" என்று பெயர் மாற்றி கொண்டு நடித்தார்.
- இவர் சென்னையில் ஒரு மலையாள பிராமணர் குடும்பத்தில் கிருஷ்ணரத்னம் ஐயர் (கிருஷ்ணன்)–உமாபாரதி (உமா) இணையாருக்கு மகளாக பிறந்தார்.
- இவரது தந்தை ஆரம்பகாலத்தில் சென்னையில் ஒரு பெரிய நட்சத்திர உணவகத்தில் கணக்காளராக வேலை செய்து வந்தார்.
- அதே சமயத்தில் திரிஷா படிக்கும் வயதில் இருந்தே பள்ளி மற்றும் கல்லூரி காலங்களில் நடத்தபடும் பல நாடக போட்டிகளில் கலந்து கொண்டு தனது நடிப்பை வெளிபடுத்தி பாராட்டினை பெற்றார்.
- அதை உணர்ந்த தாயார் உமா அவர்கள் தனது மகளின் நடிப்பு திறமையை கண்டறிந்து திரையுலகில் ஒரு பெரிய நட்சத்திரநாயகியாக ஆக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பல திறன் போட்டிகளில் அனுராதிகாவை (திரிஷா) களமிறக்கினார்.
திரைப்படங்கள்
ஆண்டு | திரைப்படம் | பாத்திரத்தின் பெயர் | மொழி | மேலும் தகவல்கள் |
---|---|---|---|---|
1999 | ஜோடி | துணை கதாபாத்திரம் "அனுராதா" | தமிழ் | |
2002 | மௌனம் பேசியதே | சந்தியா | தமிழ் | வெற்றியாளர், தமிழின் சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது |
2003 | மனசெல்லாம் | மலர் | தமிழ் | |
சாமி | புவனா | தமிழ் | ||
லேசா லேசா | பாலமணி | தமிழ் | வெற்றியாளர், ஐ.டி.எஃப்.ஏ.வின் சிறந்த புதுமுக நடிகைக்கான விருது | |
அலை | மீரா | தமிழ் | ||
எனக்கு 20 உனக்கு 18 | பிரீத்தி | தமிழ் | ||
2004 | வர்ஷம் | சைலஜா | தெலுங்கு | சிறந்த தெலுங்கு திரைப்பட நடிகைக்கான விருது சந்தோசம் விருது ஆகியவற்றைப் பெற்றார். |
கில்லி | தனலட்சுமி | தமிழ் | ||
ஆய்த எழுத்து | மீரா | தமிழ் | ||
2005 | திருப்பாச்சி | சுபா | தமிழ் | |
அத்தடு | தெலுங்கு | |||
நுவ்வொஸ்தானண்டே நேனொத்தண்டானா | Siri | தெலுங்கு | வெற்றியாளர், சிறந்த தெலுங்கு நடிகைக்கான விருது பிலிம்பேர் விருது வழங்கப்பட்டது. நந்தி விருதினை வென்றார்., சிறந்த நடிகைக்கான சினி”மா” விருது | |
ஜி | புவனா | தமிழ் | ||
நந்து | பூரி | தெலுங்கு | சிறந்த தெலுங்கு நடிகைக்கான பிலிம்பேர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார். | |
அல்லாரி புல்லோடு | திரிஷா ராவ் | தெலுங்கு | ||
ஆறு | மகாலட்சுமி | தமிழ் | ||
2006 | ஆதி | அஞ்சலி | தமிழ் | |
பௌர்ணமி | பௌர்ணமி | தெலுங்கு | சமர்// தமிழ் | |
பங்காரம் | சிறப்புத் தோற்றம் | தெலுங்கு | ||
உனக்கும் எனக்கும் சம்திங் சம்திங் | கவிதா | தமிழ் | விருப்பமான நடிகைக்கான விஜய் விருதுகளை வென்றார். | |
ஸ்டாலின் | சித்ரா | தெலுங்கு | ||
சைனிகுடா | வரலட்சுமி | தெலுங்கு | ||
2007 | ஆடவாரி மாடலகு அர்தாலே வேறுலே | கீர்த்தி | தெலுங்கு | சிறந்த நடிகைக்கான சினி”மா” விருது, சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது ஆகியவற்றைப் பெற்றார். |
கிரீடம் | திவ்யா | தமிழ் | பரிந்துரை, பிடித்த நடிகைக்கான விஜய் விருது | |
2008 | கிருஷ்ணா | சந்தியா | தெலுங்கு | பரிந்துரை, சிறந்த தெலுங்கு நடிகைக்கான பிலிம்பேர் விருது |
பீமா | சாலினி | தமிழ் | ||
வெள்ளி திரை | திரிஷவகா | தமிழ் | சிறப்புதோற்றம் | |
குருவி | ராதாதேவி/தேவி | தமிழ் | ||
புஜ்ஜிகாடு | சித்தி | தெலுங்கு | ||
அபியும் நானும் | அபி ரகுராம் | தமிழ் | வெற்றியாளர், தமிழ்நாடு அரசின் சிறப்பு விருது பரிந்துரை, சிறந்த தமிழ் நடிகைக்கான விருது பரிந்துரை, பிடித்த நடிகைக்கான விஜய் விருது | |
கிங் | சிராவணி | தெலுங்கு | ||
2009 | சர்வம் | சந்தியா | தமிழ் | பரிந்துரை, பிடித்த நடிகைக்கான விஜய் விருது |
சங்கம் | மகாலட்சுமி பசுபதி | தெலுங்கு | ||
2010 | நமோ வெங்கடேசா | பூஜா | தெலுங்கு | |
விண்ணைத்தாண்டி வருவாயா | ஜெசி தேக்குட்டு | தமிழ் | ||
யே மாயா சேசாவே | திரிசா | தெலுங்கு | சிறப்புதோற்றம் | |
காட்டா மேதா | கேனா கன்பூலே | இந்தி | ||
மன்மதன் அம்பு | அம்புஜம் | தமிழ் | ||
2011 | குஷிகா | தெலுங்கு | ||
மங்காத்தா | தமிழ் | |||
2015 | சகலகலா வல்லவன் | திவ்யா | தமிழ் | |
2015 | லயன் | மகாலட்சுமி | தெலுங்கு | |
2015 | என்னை அறிந்தால் | தமிழ் | ||
2015 | சீக்கட்டி ராஜ்யம் | மல்லிகா | தெலுங்கு | |
2015 | பூலோகம் | சிந்து | தமிழ் | |
2016 | அரண்மனை 2 | அனிதா | தமிழ் | |
2016 | நாயகி | காயத்ரி | தமிழ் | |
2016 | கொடி | ருத்ரா | தமிழ் | |
2018 | ஹே ஜூட் | கிரிஸ்டல் ஆன் சக்ரபரம்பு | மலையாளம் | |
2018 | மோகினி | மோகினி / வைஷ்ணவி | தெலுங்கு | |
2018 | 96 | S. ஜானகி தேவி | தமிழ் | |
2019 | பேட்ட | சரோ | தமிழ் |
விருதுகள்
மேற்கோள்கள்
- ↑ "தமிழ் சினிமாவின் முன்னணி நாயகி த்ரிஷாவின் பிறந்த தினம்!". நியூஸ்ஜெ தொலைக்காட்சி. Archived from the original on 2021-05-05. பார்க்கப்பட்ட நாள் மே 4, 2021.
- ↑ "எம். எஸ். என் தளச் செய்தி". Archived from the original on 2007-05-13. பார்க்கப்பட்ட நாள் 2007-05-18.
வெளியிணைப்புகள்
- அதிகாரப்பூர்வ இணையத்தளம். (ஆங்கில மொழியில்)
- இணையத் திரைப்படத் தரவுத்தளத்தில் த்ரிஷா (ஆங்கில மொழியில்)
- I love being famous, says Trisha