திரிசிரன்

திரிசிரன் அல்லது முத்தலையன் (ஆங்கிலம்: Trishira அல்லது Trisiras, சமக்கிருதம்: त्रिसिर) அசுரர் குல மன்னரும் இலங்கை வேந்தனுமான இராவணனின் ஏழு மகன்களில் ஒருவர் ஆவார். மூன்று தலைகள் கொண்டவன் என்பதால் இவன் திரிசிரஸ் என அழைக்கப்பட்டான். இவனது மற்ற சகோதரர்கள் முறையே இந்திரஜித், பிரகஸ்தன், அதிகாயன், அட்சயகுமாரன் மற்றும் நராந்தகன் - தேவாந்தகன் (இரட்டையர்) ஆவார்.

முத்தலையுடைய இராவணனின் மகன் திரிசிரனை, அனுமான் தலைமையிலான வானரப்படைகள் சூழ்ந்து தாக்குதல்

இராமகாதையின் யுத்த காண்டத்தில், அனுமானின் தாக்குதலுக்கு இலக்காகி, திரிசிரனின் மூன்று தலைகளும் கொய்யப்பட்டது.[1]

மேற்கோள்கள்


"https://tamilar.wiki/index.php?title=திரிசிரன்&oldid=38425" இருந்து மீள்விக்கப்பட்டது