திட்டக்குடி

பட்டுக்கோட்டைக்கு அருகில் உள்ள திட்டக்குடி பற்றி அறிய, திட்டக்குடி கட்டுரையைப் பார்க்கவும்.

திட்டக்குடி (ஆங்கிலம்:Tittakudi), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கடலூர் மாவட்டத்தில் உள்ள திட்டக்குடி வட்டத்தின் தலைமையிடமும், நகராட்சியும் ஆகும். திட்டக்குடி நகரம் முந்தைய தென் ஆற்காடு மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.

திட்டக்குடி
திட்டக்குடி
இருப்பிடம்: திட்டக்குடி

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 11°25′00″N 79°07′00″E / 11.416667°N 79.116667°E / 11.416667; 79.116667Coordinates: 11°25′00″N 79°07′00″E / 11.416667°N 79.116667°E / 11.416667; 79.116667
நாடு  இந்தியா
பகுதி சோழ நாடு
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் கடலூர்
வட்டம் திட்டக்குடி
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில் குமார், இ. ஆ. ப [3]
நகராட்சி ஆணையர்
சட்டமன்றத் தொகுதி திட்டக்குடி

வார்ப்புரு:சட்டமன்றத் தொகுதி/குறிப்புகள்

சட்டமன்ற உறுப்பினர்

சி. வெ. கணேசன் (திமுக)

மக்கள் தொகை

அடர்த்தி

22,894 (2011)

1,552/km2 (4,020/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 14.75 சதுர கிலோமீட்டர்கள் (5.70 sq mi)
குறியீடுகள்
இணையதளம் www.townpanchayat.in/tittakudi

2021-இல் நகராட்சியாக தரம் உயர்த்துதல்

16 அக்டோபர் 2021 அன்று திட்டக்குடி பேரூராட்சியை நகராட்சியாக உருவாக்குவதற்கான அரசாணையை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் கூடுதல் தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா வெளியிட்டார்.[4][5]

அமைவிடம்

கடலூர் - திருச்சி நெடுஞ்சாலையில் அமைந்த திட்டக்குடி நகராட்சி, கடலூரிலிருந்து 92 கிமி தொலைவில் உள்ளது. இதனருகே உள்ள தொடருந்து நிலையம், 17 கிமீ தொலைவில் உள்ள பெண்ணாடம் ஆகும். இதன் கிழக்கில் விருத்தாச்சலம் 33 கிமீ தொலைவில் உள்ளது. மங்களூர் ஊராட்சி ஒன்றியம் 24 கிலோ மீட்டர் தெலைவில் உள்ளது.

நகராட்சியின் அமைப்பு

14.75 சகிமீ பரப்பும், 18 பேரூராட்சி மன்ற உறுப்பினரகளையும், 63 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி அருகில் உள்ள சில கிராமங்களை இணைத்து நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது திட்டக்குடி (சட்டமன்றத் தொகுதி)க்கும், கடலூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. [6]

மக்கள் தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 5,552 வீடுகளும், 22,894 மக்கள்தொகையும் கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 78.3% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 982 பெண்கள் வீதம் உள்ளனர். குழந்தைகள் பாலின விகிதம் 1000 ஆண் குழந்தைகளுக்கு, 937 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் 6,302 முறையே மற்றும் 4 ஆகவுள்ளனர். [7]

ஆதாரங்கள்

"https://tamilar.wiki/index.php?title=திட்டக்குடி&oldid=40260" இருந்து மீள்விக்கப்பட்டது