தா. பழூர் ஊராட்சி ஒன்றியம்
தா. பழூர் ஊராட்சி ஒன்றியம் , இந்தியாவின் தமிழ்நாட்டின், அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஆறு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] தா. பழூர் ஊராட்சி ஒன்றியம், 33 ஊராட்சிகளைக் கொண்டது.[2] இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் தா. பழூரில் இயங்குகிறது.
மக்கள் வகைப்பாடு
2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் கணக்கெடுப்பின் படி, தா. பழூர் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,06,142 பேர் ஆவர். அதில் பட்டியல் சமூக மக்களின் தொகை 24,772 பேர் ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 2,148 பேர் ஆக உள்ளது.[3]
ஊராட்சி மன்றங்கள்
தா. பழூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 33 ஊராட்சி மன்றங்களின் விவரம்; [4]
- வெண்மான்கொண்டான்
- வேம்புகுடி
- வாழைக்குறிச்சி
- உல்லியக்குடி
- உதயநத்தம்
- தென்கச்சிப்பெருமாள்நத்தம்
- தா. பழூர்
- சுத்தமல்லி
- ஸ்ரீபுரந்தான்
- சாத்தம்பாடி
- பொற்பதிந்தநல்லூர்
- பருக்கல்
- நாயகனைபிரியாள்
- நடுவலூர்
- மணகெதி
- கோடங்குடி
- கோடாலிகருப்பூர்
- கீழநத்தம்
- காசான்கோட்டை
- கார்குடி
- காரைக்குறிச்சி
- காடுவெட்டாங்குறிச்சி
- கடம்பூர்
- குணமங்கலம்
- கோவிந்தப்புத்தூர்
- இருகையூர்
- இடங்கண்ணி
- சோழமாதேவி
- சிந்தாமணி
- அணிக்குறிச்சி
- அணைக்குடம்
- அம்பாபூர்
- ஆதிச்சனூர்
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
- அரியலூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம் பரணிடப்பட்டது 2015-07-08 at the வந்தவழி இயந்திரம்