தாருல் இஸ்லாம் (இதழ்)

தாருல் இஸ்லாம்,(தத்துவ இஸ்லாம்) இது இந்தியாவிலிருந்து வெளிவந்த ஒரு இதழாகும்.

தாருல் இஸ்லாம்
பத்தாம் ஆண்டு நிறைவு மலர் 1929
தாருல் இஸ்லாம் (இதழ்)
இதழாசிரியர் பா. தாவூத்ஷா
என். பி. அப்துல் ஜப்பார்
துறை
வெளியீட்டு சுழற்சி வாரம்
மொழி தமிழ்
முதல் இதழ் 1919
இறுதி இதழ் [[]]
இதழ்கள் தொகை
வெளியீட்டு நிறுவனம் ஆசிரியர் முஸ்லிம் சங்கம்
நாடு இந்தியா
வலைப்பக்கம் [1]

முதல் இதழ்

1919ம் ஆண்டில் தத்துவ இஸ்லாம் என்ற பெயரில் வெளிவந்த இந்த இதழ் சனவரி 1923 இல் தாருல் இஸ்லாம் என பெயர் மாற்றப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் மாத இதழாகத் தொடங்கி அக்டோபர் 1 1927 முதல் வார இதழாகியுள்ளது. 1934ல் இது வாரம் இரு முறை இதழாக வெளிவந்துள்ளது. பின்பு மாத இதழாகி 1955ல் மறைந்துள்ளது.

ஆசிரியர்கள்

படிமம்:Dhaawudth Shah.jpg
ப. தாவூத் ஷா

ஆசிரியர் பா. தாவூத் ஷா வாழ்க்கைப் போராட்டத்தில் வறுமையால் பாதிக்கப்பட்டாலும் இதழியல் பணிகளிலும், சமூகத்தொண்டிலும் உறுதியாக இருந்துள்ளார். தமிழ் மொழியை வளர்ப்பதிலும் முஸ்லிம்கள் தமிழ் மொழியைத் தாய்மொழியாக ஏற்க வேண்டும் என்பதிலும் கூடிய ஆர்வம் காட்டியுள்ளார். (இவர் பிப்ரவரி 24, 1969ல் காலமாகியுள்ளார்).

'தாருல் இஸ்லாம்' மாத இதழின் பொறுப்பாசிரியராக இவருடைய மூத்த மகனார் என்.பி. அப்துல் ஜப்பார் பணிபுரிந்தார். 'என்.பி.ஏ.' என்று அன்புடன் அழைக்கப்பட்டு வந்த அவர், சிறுகதை எழுத்தாளர், நாவலாசிரியர், துணிச்சலான பத்திரிகை ஆசிரியர், நூல் ஆசிரியர், பதிப்பாசிரியர், விமர்சகர் என்ற பல சிறப்புகளுக்குரியவராகத் திகழ்ந்தார். தாருல் இஸ்லாம் இதழ்களில் சிறுகதைகளையும், கட்டுரைகளையும், விமர்சனங்களையும் ஏராளமாக எழுதியுள்ளார், இவர் 1995ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 26ஆம் தேதி தமது 76ஆவது வயதில் சென்னையில் காலமானார்.

வெளியீடு

  • ஆசிரியர் முஸ்லிம் சங்கம்

பொருள்

தாருல் இஸ்லாம் என்ற சொற்றொடர் இஸ்லாத்தின் வீடு என்று பொருள்படும். மேலும், தாருல் இஸ்லாம் என்பது முஸ்லிம் உலகம் எனும் சிறப்புப் பொருளிலே வழங்கப்பட்டு வருவதால் இவ்விதழின் பெயரானது முஸ்லிம் உலகம் என்று பொருள்படக் கூடியதாக இருந்தது.

தாருல் இஸ்லாம் - நோக்கம்

தாருல் இஸ்லாம் பின்வரும் நோக்கங்களைக் கொண்டிருந்தன. அவை:

  • முதன்மையானது முஸ்லிம் சமுதாயத்திலிருந்த மூடப்பழக்க வழக்கங்களை எதிர்ப்பது.
  • தாய்மொழியான தமிழ் மொழியிலேயே இஸ்லாத்தின் விடயங்களை உணர்ந்துகொள்ள வழியமைத்தல்.
  • குத்பா எனும் மார்க பிரசங்கஉரையைத் தமிழில் நிகழ்த்தப்படுவதை வலியுறுத்தல்.
  • முஸ்லிம்கள் எல்லாருக்கும் தமிழ் மொழியில் நல்ல பயிற்சி வளங்களை வலியுறுத்தல்.
  • முஸ்லிம் பெண்களுக்கும் தமிழ்க் கல்வியையும், ஆங்கிலக் கல்வியையும் வழங்கல்.
  • தேசிய விவகாரங்களில் எனையவர்களுடன் இணைந்து செயற்படல்.

• தமிழக இஸ்லாமியரிடையே புரையோடியிருந்த மூடப்பழக்கங்களை களைவது.

• தமிழக முஸ்லிம் பெண்களின் கல்வியை மேம்படுத்துவது.

எமது பத்திரிகை

“தத்துவ இஸ்லாம்” முதல் இதழில், “எமது பத்திரிகை” என்ற தலைப்பில் தாவூத் ஷா எழுதிய குறிப்பு வருமாறு:

தாருல் இஸ்லாம் - இணையம்

பா. தாவூத் ஷாவின் பேரர் நூருத்தீன் அவர்களால் இணைய தளமொன்று www.darulislamfamily.com துவங்கப்பட்டு தாருல் இஸ்லாம் இதழ்களை மின்வடிவில் சேமிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

"https://tamilar.wiki/index.php?title=தாருல்_இஸ்லாம்_(இதழ்)&oldid=17593" இருந்து மீள்விக்கப்பட்டது